எஸ்பிஐ வங்கியில் வேலை.. 85 ஆயிரம் சம்பளம்.. பிஇ/பிடெக் முடிச்சவங்களா நீங்க.. செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: எஸ்.பி.ஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ஜினியரிங், பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது?, எத்தனை பணியிடங்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் வங்கி உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.ஐ நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் பொதுத்துறை வங்கி என்பதால், வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

இதனால் போட்டி தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள் எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், எஸ்.பி.ஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: அசிஸ்ட்ண்ட் மேனேஜர் (சிவில், எலக்ட்ரிக்கல், என்ஜினியர் - ஃபயர்) - 168 பணியிடங்கள் கல்வி தகுதியை பொறுத்தவரை என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சிவில் பணிக்கு சிவில் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (Engineer- Fire) பணிக்கு என்.எப்.சி நாக்பூரில் இருந்து பிஇ (Fire) அல்லது பிஇ/பிடெக் (Safety & Fire Engg) ஆகிய ஏதேனும் ஒன்றை முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: எலக்ட்ரிகல் பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40 அகும். இதர பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
1. உதவி மேலாளர் (என்ஜினியர்- சிவில்) - ரூ.48,480-85,920/-
2. உதவி மேலாளர் (என்ஜினியர்- எலக்ட்ரிக்கல்) - ரூ.48,480 -85,920/-
3. உதவி மேலாளர் (என்ஜினியர்- தீயணைப்பு) - ரூ.48,480 - 85,920/-
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்; 22.11.2024. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 12.12.2024.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://sbi.co.in/documents/77530/43947057/21112024_FINAL+ADV_OL+%26+CS+REGULAR_SCO_2024-25_18.pdf/24047c7d-6ee1-4521-bea1-844cb1ae91b9?t=1732196250004












Click it and Unblock the Notifications