ரூ 20 ஆயிரம் சம்பளத்தில் உள்ளூரிலேயே வேலை! அதுவும் பெண்களுக்கு மட்டுமே! சீக்கிரம் அப்ளை செய்ங்க
சென்னை: ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ 20 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.
வடசென்னையில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சீனியர் கவுன்சலர்- இதற்கான கல்வித் தகுதி social work or psychologyயில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ 20 ஆயிரம் ஆகும். இதற்கு உள்ளூரை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி கொடுக்கப்படும். ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
பன்முக உதவியாளர் - இந்த பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்போருக்கு சமையல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு மாத ஊதியமாக ரூ 6400 வழங்கப்படும்.
இந்த இரு பதவிகளுக்கும் உரிய சான்றிதழ்களுடன் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற ஈமெயில் முகவரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications