உச்ச நீதிமன்றத்தில் வேலை! உதவியாளர் உள்பட 107 பணியிடங்கள்.. 67 ஆயிரம் வரை சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கோர்ட் மாஸ்டர், தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்படிப்பு முடித்தவர்கள், ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் மிக உயரிய நீத்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர், பெர்சனல் உதவியாளர் உள்ளிட்ட 107 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹண்ட்) - 31
சீனியர் பெர்சனல் அசிஸ்டண்ட் - 33
பெர்சனல் அசிஸ்டண்ட் (குரூப் பி) - 43
என மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
*கோர்ட் மாஸ்டர் பணிக்கு சட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். சுருக்கெழுத்து திறன் அவசியம். கணினி இயக்கும் திறன் டைப்பிங் திறனும் அவசியம். பணி அனுபவம் அவசியம். சீனியர் பெர்சனல் அஸ்சிஸ்ட்ண்ட்/ தனி செயலர்/ அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் சீனியர் ஸ்டெனோகிராபர் என ஏதாவது ஒரு அனுபவம் அவசியம்.
* சீனியர் பெர்சனல் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். சுருக்கெழுத்து திறன் (ஆங்கிலம்) அவசியம். ஒரு நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுத தெரிந்து இருக்கவேண்டும். கணினி பற்றிய திறனும் அவசியம்.
* தனி உதவியாளர் (பெர்சனல் அசிஸ்டண்ட்) - பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் சுருக்கெழுத்து திறன் அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: தனி உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கோர்ட் மாஸ்டர் பணிக்கு 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
கோர்ட் மாஸ்டர் - ரூ.67,700
சீனியர் பிஏ - 47,600
பிஏ - ரூ.44,900
தேர்வு முறை: எழுத்து தேர்வு, டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்து திறன் ஆகிய தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். அகமதாபாத், அம்பாலா, பெங்களூர், போபால், புவனேஷ்வர், சென்னை, டெல்லி, எர்ணாகுளம், கவுகாத்தி, ஐதராபாத், ஜபல்பூர், ஜெய்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூர், நாக்பூர் பாட்னா, பிரக்யா ராஜ், புனே, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31.12.2024 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sci.gov.in/recruitments/












Click it and Unblock the Notifications