சென்னையில் வசிப்பவரா நீங்க.. தமிழில் எழுத படிக்க தெரிஞ்சா அரசு வேலை.. மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம்
சென்னை: தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறையின் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், இரவு நேரக்காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. நிரந்தர வேலையான இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை கீழே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
நிரந்தர முழு நேரக் காவலர் : 01
தூய்மைப் பணியாளர்: 02
அலுவலக உதவியாளர் - 06
என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: வாட்ச்மேன் பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் பணிக்கும் இதே தகுதிதான் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு & சம்பளம்: பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 18-32 ஆகும். பிசி, எம்.பி.சி பிரிவினருக்கான வயது வரம்பு 18-34 ஆகும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 18-37 ஆகும். சம்பளத்தை பொறுத்தவரை அனைத்து பணியிடத்திற்கும் ரூ. 15,700 - 58,100 வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் ஒட்டி அனுப்ப வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்வது அவசியம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வி தகுதி உள்ளிட்ட சான்றுகளின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இயக்குநர்,
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை,
டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை,
சென்னை - 600006.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பங்களை அனுப்ப 05.12.2023 கடைசி நாளாகும். அதன்பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும் முகவரிக்கு நேர்முகத்தேர்வு பற்றிய விவரங்கள் தபால் மூலம் தெரிவிக்கப்படும்..
தேர்வு அறிவிப்பை படிக்க https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf கிளிக் செய்யவும்.
விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்ய https://des.tn.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications