எழுதப் படிக்க தெரிந்தால் ஓகே.. டிகிரி இருந்தால் டபுள் ஓகே! இந்து சமய அறநிலையத் துறை கோவிலில் வேலை!
சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து டிசம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின் படி, கோயிலில் உதவி பொறியாளர் (சிவில்), இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், தமிழ் புலவர், உதவி மின்பணியாளர், பாரா, குருக்கள் அர்ச்சகர் (நிலை-2), காவலர் மற்றும் உதவி பரிச்சாரகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி குறைந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி பெற்றவர்களுக்கும் ஏற்ற வகையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வேலை தேடுபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை அரசு ஊதிய நிர்ணயத்தின்படி சம்பளம் வழங்கப்படும். அதேபோல், சீட்டு விற்பனையாளர் பணிக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.
உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு சிவில் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் புலவர் பணிக்கு பி.லிட், பி.ஏ, எம்.ஏ அல்லது எம்.லிட் முடித்திருக்க வேண்டும். உதவி மின்பணியாளர் பணிக்கு ஐடிஐ மற்றும் மின் உரிம வாரியத்தின் "எச்" சான்றிதழ் அவசியம். பாரா, காவலர், உதவி பரிச்சாரகர் போன்ற பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது போதுமானதாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 தேதியின்படி குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.hrce.tn.gov.in அல்லது https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in
என்ற இணையதளங்களில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதும், விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை - 600 004
என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 28, 2025-க்குள் கோயில் அலுவலகத்தை வந்தடைய வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் புகழ்பெற்ற திருக்கோயிலில் பணியாற்றும் வாய்ப்பு என்பதால், தகுதியானவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications