கோவை - கரூரில் ஐடி வேலை.. ரூ.4.2 லட்சம் வரை சம்பளம்.. அரியர்ஸ் இருப்போரும் விண்ணப்பிக்கலாம்
கோவை: கோவை, கரூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான ஆன்லைன் இண்டர்வியூ ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அரியர்ஸ் இருப்போர் மற்றும் கல்லூரி படிப்பில் குறைந்த மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சியுடன் பணி வழங்கப்படுவதோடு, ஆண்டுக்கு ரூ.4.2 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
தமிழகத்தில் Mallow Technologies என்ற நிறுவனம் கோவை மற்றும் கரூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது ஜுனியர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பணி அனுபவம் என்பது தேவையில்லை.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் அல்லது குறைந்த மதிப்பெண் இருப்போரும் கூட விண்ணப்பம் செய்யலாம்.
இவர்கள் 2025, 2024, 2023 ஆகிய ஆண்டுகளில் கல்லூரியில் படித்து முடித்திருக்க வேண்டும். ஆனாலும் விண்ணப்பம் செய்வோருக்கு Positive Attitude இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜி பற்றி கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், புரோகிராமிங் மற்றும் டெக்னாலஜி குறித்த பேஷன் இருக்க வேண்டும்.
ஜுனியர் டெவலப்பர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4.3 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 5ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை Virtual முறையில் நடக்கும். முதலில் தகுதி சுற்று நடத்தப்படும். அதன்பிறகு Aptitude மற்றும் Coding Skills, HR Rounds முறையில் இண்டர்வியூ நடக்கும்.
Coding Skills இண்டர்வியூ C, C++, java, python 3 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடக்கும். கடைசி கட்ட இண்டர்வியூவில் லேப்டாப்புடன் பங்கேற்க வேண்டும். ரெஸ்யூம், சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும். அதன்பிறகு பணியிடம் பற்றிய அறிவிப்பு என்பது இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பயிற்சி என்பது 3 மாதம் வரை இருக்கும். பயிற்சியை முடித்தவர்கள் ஜுனியர் டெவலப்பராக கோவை மற்றும் கரூரில் உள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்உடனடியாக https://forms.office.com/pages/responsepage.aspx?id=1Hi3Cx6Ktk6hZfgCnIpeE1HecHxNr2xIgjhe4p3iho1URFM4OEI1R1A1VDFPS0FBUDQyV0VSNEc5RS4u&route=shorturl என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications