டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ.51,684 சம்பளம்.. அழைக்கும் என்பிசிஐஎல்
சென்னை: இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.51,684 சம்பளத்தில் பணியை பெற முடியும்.
மத்திய அரசின் நிறுவனமாக இந்திய அணுசக்தி கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: என்பிசிஐஎல் நிறுவனத்தில் Stipendiary Trainee/Scientific Assistant பணிகள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவுக்கு 25 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவுக்கு தலா 12 பேர், பிஎஸ்சி (இயற்பியல்) பிரிவுக்கு 4 பேர் என மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்ப என்பது 14.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
கல்வி தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரீக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுக்கான பணியை பெற விரும்புவோர் டிப்ளேமாவில் இந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி (இயற்பியல்) படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.51,684 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ராஜஸ்தான் மாநிலம் ரவத்பட்டாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: அதாவது https://www.npcilcareers.co.in/ இணையதளம் மூலம் விண்ணப்பத்தாரர்கள் பிப்ரவரி 14ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபடி, முன்னாள் படை வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications