ஆடி மாதம் தனுசு ராசிக்கு லக்கி டைம்.. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் தேவை!
ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார்.

செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் தனுசு ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி மற்றும் லக்னத்திற்கு உத்தியோகத்தில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படுவது, வார்த்தையை விடுவது, பேப்பர் போடுவதை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். வேறு வேலை கிடைப்பதிலும் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மீண்டும் இன்னொரு வேலை கிடைக்காத நிலை ஏற்படும். வேலை கிடைப்பது தள்ளிப்போகும் நிலைமை ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
பயணங்கள்
மேலதிகாரிகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசுத் துறை, அரசாங்கத் துறையில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிறைய பணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். மனதில் புத்துணர்வு உண்டாகும். எல்லாவற்றையும் சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை ஏற்படும்.
முன்னேற்றம்
ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த விஷயத்தில் இருந்த பதட்டம் குறையும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கத்துவது, கோபப்படுவது, போனில் திட்டுவது, சமூக வலைதளங்களில் பதிவிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆட்படுவீர்கள்.
கவனம்
சட்டத்திற்கு உட்பட்ட எல்லா விஷயத்திலும் தனுசுக்கு ஏற்றம் ஏற்படும். செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. தூக்கத்தை தவிர்க்காமல் இருப்பது நன்மை பயக்கும். உடற்பயிற்சியை தினந்தோறும் தவிர்க்காமல் இருப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் ஜிஎஸ்டி, வருமான வரி போன்றவற்றை பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்கவில்லை என்றால் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்தை தரும். அண்டை வீட்டுக்காரர்கள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்கள், வேலையாட்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது ஏற்றத்தைத் தரும். தலைவலி, சளி சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சரிசெய்து கொள்வது நல்லது. நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஆடி மாதத்தில் அன்னதானம் தருவது நன்மை பயக்கும்.














Click it and Unblock the Notifications