ரயில்வேயில் 11 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆர்ஆர்பி தேர்வு.. எக்சாம் எப்போது நடக்க சான்ஸ்? வெளியான தகவல்
சென்னை: ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 11,000 பணியிடங்களை நிரப்புவதற்காக ஆர்ஆர்பி என்.டி.பிசி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். இதற்கான அப்டேட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வு வாரியமான ஆர்ஆர்பி என்.டி.பி.சி 11 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் இதற்கான தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 பணியிடங்கள்
2. ஸ்டேஷன் மாஸ்டர் - 994
3. சரக்கு ரயில் மேலாளர் - 3,144
4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507
5. சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732
6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022
7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361
8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990
9. ரயில்கள் கிளார்க் - 72 என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி:
கல்வி தகுதி பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். டிகிரி மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். டிகிரி கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதே போன்று 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
* Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர்: மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும்.
* ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும்.
* ஜூனியர் கிளர்க் - மாதம் ரூ. 29,200 சம்பளம் வழங்கப்படும்.
* கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700 சம்பளம் வழங்கப்படும்.
* இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.
தேர்வு எப்போது?
இந்த பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அரசு வேலை என்பதால் இளைஞர்கள் பலரும் தீவிரமாக படித்து வருகிறார்கள். தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், எப்போது தேர்வு நடைபெறும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் தான் ரயில்வே தேர்வுக்கான கணினி தேர்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெறும் என ரயில்வே தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், தேர்வர்கள் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவ்வப்போது செக் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
நீலகிரி வெலிங்டன்னில் வேலை.. குரூப் சி பிரிவில் 78 காலியிடங்கள்! 93 ஆயிரம் சம்பளம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications