வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ஃட் சார்பில் வீட்டில் இருந்தே பணி செய்ய தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மைக்ரோசாப்ட்.. பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இந்த நிறுவனத்தில் தயாரிப்புகள் தான் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால்
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ஃட்.

இந்த நிறுவனம் நம் நாட்டில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தற்போது மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தில் யுஎக்ஸ் ரீசர்சர் II (UX Researcher II) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன், ப்ராடெக்ட் இன்டராக்சன் மற்றும் தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி புராடக்ட் (Product) அல்லது சர்வீஸ் டிசைன் (Service Design)அல்லது ப்ராடக்ஷன் கோட் (Production Code) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் 6 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிக ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் பணியாற்றலாம். அதன்படி வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இருப்பினும் அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும். மேலும் பணிக்கான சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவத்தை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம்.விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications