ரிசர்வ் வங்கியில் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்.. பட்டதாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. விட்றாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிசர்வ் வங்கியில் (Reserve Bank Job) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, வங்கிகளின் வங்கியாக செயல்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி, டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ளது.

reserve-bank-job-recruitment-notification-released-for-120-vacancies

பணியிடங்கள் விவரம்:

சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ரிசர்வ் வங்கியின் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

* கிரேடு B (DR) அதிகாரிகள் - பொது - 83 பணியிடங்கள்
* கிரேடு B (DR) அதிகாரிகள் - பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறை (DEPR): 17 பணியிடங்கள்
* கிரேடு B (DR) அதிகாரிகள் - புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (DSIM): 20 பணியிடங்கள்.

கல்வித் தகுதி:

* பணியிடத்திற்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பொது அதிகாரி பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். சிஏ அல்லது டெக்னிக்கல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

* பொருளாதாரம் சார்ந்த பணிக்கு பொருளியல், நிதி அல்லது அதுசார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். பிஜிடிஏ/எம்பிஏ, ஆய்வு / ஆசிரியர் துறை அனுபவம் இருந்தால் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

* புள்ளியியல் சார்ந்த பணிக்கு புள்ளியியல், கணித புள்ளியியல், கணித பொருளியல் அல்லது அது சார்ந்த படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

வயது வரம்பு

21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1, 2025 தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எம்.பில்/பிஎச்.டி முடித்தவர்களுக்கு 34 வயது வரை தளர்வுகள் உண்டு. இதுபோக வயது வரம்பில் அரசு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ.850 கட்டணம் ஆகும்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் ஆகும்.

தேர்வு முறை எப்படி?

தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு வைக்கப்படும். மொத்தம் 3 கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://website.rbi.org.in/en/web/rbi

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+