அரசு வேலை.. மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்.. 1324 பணியிடங்கள்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் தேர்வு ஆணையமான SSC -1324 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம் வாருங்கள்.
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது 1324 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் என்ஜினீயர் (சிவில், மெக்கானிக்கல் &எலக்ட்ரிக்கல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி, கல்வி தகுதி, உள்ளிட்ட முழு விவரங்களை பார்ப்போம்

காலிப்பணியிடங்கள்: ஜுனியர் என்ஜினீயர் (சிவில்) பிஆர்.ஓ -431 பணியிடங்கள், ஜுனியர் என்ஜினீயர்(எலக்ட்ரிக்கல் &மெக்கானிக்கல்) (BRO) -55 பணியிடங்கள், ஜுனியர் என்ஜினீயர் (சிவில்) மத்திய பொது பணித்துறை (CPWD) -421 பணியிடங்கள், ஜுனியர் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்) (CPWD) -124 பணியிடங்கள், ஜுனியர் என்ஜினீயர் (சிவில்) மத்திய நீர் ஆணையம் -188 பணியிடங்கள், ஜுனியர் என்ஜினீயர்(மெக்கானிக்கல்) மத்திய நீர் ஆணையம்-23 பணியிடங்கள் என மொத்தம் 1324 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பற்றிய முழு அறிவிப்பு தேர்வு அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது யுனிவர்சிட்டிகளில் இருந்து என் ஜினீயரிங் அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். துறைசார்ந்த பிரிவில் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். துறைசார்ந்த அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக 35,400 - 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, PwBD உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி , வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. கணிணி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். தேர்வு குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/NOTICE_JE_2023_26072023.pdf இதை கிளிக் செய்யவும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications