தமிழில் படித்தவர்களுக்காக மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிப்பு
சென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பல ஆயிரம் காலி பணியிடங்கள் இருக்கிறது. இதனால் மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கி உள்ளது.
இதன் பகுதியாக கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தம் 500 காலிபணியிடங்கள் Junior Assistant (Accounts) உள்ளன. இதற்கு கல்வித்குதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் வணிகவியல் பிரிவில் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
மாத ஊதியம்: ரூ. 19,500 - ரூ.62,000 வரை கிடைக்கும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: பொதுப்பிரிவினர் 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்து தேர்வு
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே (ஆன்லைனில்) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக
பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

தமிழில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2020 என்றும முழு விவரங்களை அறிய: மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்ன www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்தத் தோ்வுகளை தமிழில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் முடிவு
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது இந்தப் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தோ்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களின் கோரிக்கையை பரிசீலித்து அவா்களின் நலன் கருதி, இந்தத் தோ்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமா்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications