கிராம சுகாதார செவிலியர் வேலை.. 2,147 பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 71 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும் இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டுளது. மருத்துவத் துறையில் காலியாக இருக்க கூடிய கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்து இருந்தார்.

ஸ்டாலின் அறிவித்த நிலையில், சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2,147 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
துணை செலிவியர் / கிராம சுகாதார செவிலியர்- 2,147- பணியிடங்கள்
கல்வி தகுதி:
துணை செவிலியர்/ கிராம சுகாதார செவிலியர் (Auxiliary Nurse Midwife / Village Health Nurse Posts) பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். அதுபோக, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும், துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகியவற்றில் 2 ஆண்டு பயிற்சி கல்வியை பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு நிலை 8 -ன் கீழ் ரூ.19,500 -ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க வயது வரம்பை பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். SCA/ SC/ ST/ BC / BCM / MBC மற்றும் DNC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60% மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 40 சதவிதம் கணக்கிடப்படும் முழுக்க மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வர்க்ள் தேர்வு செய்யப்படுவார்கள். கொரானா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்ரகள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். https://mrb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி மற்றும் டிஏபி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகும். விண்ணப்பிக்க வரும் 14.12.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mrb.tn.gov.in/notifications.html
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications