செம வாய்ப்பு! நோ எக்ஸாம்.. 10ம் வகுப்பு போதும்! தபால் துறையில் ஏராளமான வேலை! தமிழகத்திலேயே பணி
சென்னை: இந்தியாவில் தபால் துறையில் காலியாக உள்ள 30,041 பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மட்டும் 2,994 காலியிடங்கள் உள்ளன. 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்திய தபால் துறையில் பிபிஎம் (Branch Post Master/BBM)பிரிவு மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Postmaster/ABPM) பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 30,041 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்படுபவர்கள்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்று திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 11.06.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12,000, அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது என வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் www.indiapostgdsonline.gov.in எனும் இணையதளம் மூலம் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ விபரங்களை அறிய Click Here
மாநிலங்கள் வாரியாக காலிப்பணியிடங்களை அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications