ஐஏஎஸ் ஆக ஆசையா? யுபிஎஸ்சியிடம் இருந்து வெளியான அறிவிப்பு? விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: குடிமைப்பணிகள் என அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது.
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களில் சேர வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. குடிமைப்பணிகள் என அழைக்கப்படும் இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது.

இதற்கான அறிவிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு, முதல் நிலை, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 21 வகையான சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
வயது வரம்பு & கல்வி தகுதி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை தேர்வர்கள் குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் உள்ளது.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளாக நடைபெறும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். பாண்டிச்சேரியிலும் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 14. 02. 2024; விண்ணப்பிக்க கடைசி நாள்: 05. 03. 2024. முதன்மை தேர்வு நடைபெறும் நாள்: 26. 05. 2024 ஆகும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications