ZOHO-வில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே அசத்தலான பணி.. விண்ணப்பிக்க ஜுன் 3ம் தேதி கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜுன் 3ம் தேதி கடைசி நாளாகும்.
இப்போது பலருக்கும் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணி செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இயங்கி வரும் ஜோஹோ நிறுவனத்தை குறிவைத்து பலரும் தேர்வு மற்றும் இன்டர்வியூக்களில் பங்கேற்று வருகின்றன.

ஜோஹோ நிறுவனத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அலுவலம் உள்ளது. சென்னை, மதுரை, சேலம், கோவை, தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது சென்னையில் ஜோஹோ நிறுவனத்தில் டெக்னீக்கல் சப்போர்ட் என்ஜினீயர் (Technical Support Engineers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பொறுத்தமட்டில் தேர்வாகும் நபர்கள் ப்ராடெக்ட் இம்ளிமென்டேஷன், டெமோஸ் (), டிரெய்னிங் உள்ளிட்டவற்றை வாய்ஸ் மற்றும் இ-மெயில் சப்போர்ட் மூலம் செய்ய வேண்டி ருக்கும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யபட வாய்ப்புள்ளது.
மேலும் சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் நைட் ஷிப்ட் மற்றும் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்ய ஜுன் மாதம் 3ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட ரவுண்ட்டுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications