இதைக் கேட்டு கடவுள் நிச்சயம் ஷாக்காயிருப்பார்.... !
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு உதாரணமாக விறகு வெட்டியின் கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.
ஆனால், காலத்திற்கு ஏற்ப அக்கதையை திரித்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். இதோ அந்தக் கதை உங்களுக்காக...
விறகு வெட்டி ஒருவன் ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடாரி காணாமல் போய்விட்டது.
கடவுளே என்று உரத்து கத்தினான் ...என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடாரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான். கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார். அவரது சக்தியால் தங்க உலோக கோடரியை வரவழைத்து, ‘இதுவா உன் கோடரி?' என்று கேட்டார்.
அதற்கு விறகு வெட்டி ‘இல்லை சாமி' என்றான். உடனே, வெள்ளி உலோக கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடரி' என்று கேட்டார். விறகு வெட்டி மீண்டும் இல்லை சாமி என்றான்.
இம்முறை அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து ‘இதுவா உன் கோடாரி?' எனக் கடவுள் கேட்டார். விறகு வெட்டியும் மகிழ்ச்சியுடன் ஆமாம் என்றான்.
கடவுள் விறகுவெட்டியின் நேர்மையைப் பாராட்டி, மூன்று கோடாரிகளையும் அவனுக்கே பரிசளித்தார்.
வீடு திரும்பிய விறகுவெட்டி, நடந்ததை தன் மனைவியிடம் கூறினான். பேராசை பிடித்த அவரின் மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச் செல்ல மன்றாடினாள்.
விறகு வெட்டியும் இதற்கு சம்மதித்து தன் மனைவியை காட்டிற்குள் அழைத்துச் சென்றார். வழியில் எதிர்பாராத விதமாக அவரது மனைவி காணாமல் போய் விட்டார்.
‘கடவுளே' என உரக்கக் கத்தினார் விறகுவெட்டி. ‘என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா' என்று மன்றாடினார்.
கடவுள் மீண்டும் விறகு வெட்டிக்கு தரிசனமானார். அவரது சக்தியால் சமந்தாவை வரவழைத்து, ‘இவரா உன் மனைவி?' என விறகுவெட்டியிடம் கேட்டார்.
இம்முறை விறகுவெட்டி சற்றும் தாமதிக்காமல், ‘ஆமாம். இது தான் என் மனைவி' என்றார். விறகுவெட்டியின் பதிலால் அதிர்ச்சியடைந்த கடவுள் திகைப்புடன், ‘என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே ...?' எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த விறகுவெட்டி, ‘இல்ல சாமி, நீங்கள் முதல்ல சமந்தாவை காட்டி இதுவா உன் மனைவி என்று கேட்பீர்கள். நான் இல்லை சாமி என்பேன். அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள். நான் அதற்கும் இல்லை சாமி என்பேன். கடைசியில் என் உண்மையான மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள். நானும் ஆமாம் என்பேன்.
நீ உண்மை பேசியதால் மூன்று பேரையும் உனக்கு பரிசாக அளிக்கிறேன் என்பீர்கள். நானோ விறகு வெட்டி எப்படி சாமி, மூன்றுபேரையும் வைத்து வாழுறது. அதனால் தான் சமந்தாவே போதும் எனச் சொன்னேன்' எனப் பதிலளித்தாராம்.
இதைக் கேட்டு கடவுள் நிச்சயம் ஷாக்காயிருப்பார்.... !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications