“கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று திமுக அறிவித்திருந்தால் இப்படி நடந்திருக்காது” - திருமாவளவன் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையில் தந்திருந்தால், இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை." என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை.

Thirumavalavan

அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கவில்லை. துரோகம் பண்ணிட்டாங்க எனச் சொல்றாங்க. துரோகம் பண்ண என்ன இருக்கு? நாளைக்கு கூட நாம் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதை தக்கவைப்பதற்கான அணுகுமுறையைத்தானே யாரும் எடுப்பார்கள்.

த.வெ.கவுக்கு ஆதரவு அளித்ததால் அமைச்சர் பதவி. அப்படி என்றால் தவெக அரசை, தவெக தலைவர் புகழ்ந்து பாடிக் கொண்டே இருப்போம். இப்படித்தானே சராசரி மனிதன் முடிவு எடுக்க வேண்டும். அதைத் தாண்டி பாஜக-வுக்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறான் என்றால், இந்த பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா?

ஒரு பிடிப்பு இல்லாமல் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என்றால், திமுக-வில் மீண்டும் ஒட்டிக்கொள்ள நினைக்கிறான் என்கிறார்கள். திமுகவுடன் ஒட்டிக்கொள்ள தேவை என்ன வந்தது? அர்த்தம் இல்லாத விமர்சனம் அது. சுதந்திரமாக சிந்திக்கக்கூடாது என நினைக்கிறார்கள்.

நம்முடைய ஆசையை பின்னுக்கு தள்ளி கூட்டணி தலைவரின் உள்ளம் நோகக் கூடாது என்ற அடிப்படையில் காட்டுமன்னார் கோவிலில் நிற்கக் கூடாது என்ற முடிவெடுத்தேன். ஆனால், இன்றைக்கு விடுதலை சிறுத்தைகளை திமுகவுக்கு எதிராகவும், தவெகவுக்கு எதிராகவும் நிறுத்தப் பார்க்கிறார்கள்" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+