என் உடலை சும்மா யூஸ் பண்ணிக்க கொடுக்கல! இனி விடமாட்டேன்! முத்துக்குமரன் மீது மீண்டும் பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ இப்போ அவருக்கே மீண்டும் பிரச்சனையை கொடுத்திருக்கிறது. அதற்கு முன்பு முத்துக்குமரன் மீது திருமண மோசடி குற்றச்சாட்டை வைத்து தற்கொலை முயற்சி செய்த இன்ஸ்டா பிரபலம் வாஹதா தான் இப்போ மீண்டும் முத்துக்குமரன் பற்றி அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் கடைசியாக அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய உடலை உனக்கு சும்மா கொடுக்கல, இனி உன்னை விடமாட்டேன் என்று பேசி இருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் பிக்பாஸ் முத்துக்குமரனை தெரிந்திருக்கும். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சில தனியார் தொலைக்காட்சியில் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பெண்களுக்காக சப்போர்ட்டாகவும், சமூக அவலங்களை எடுத்துச் சொல்லியும் பல வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். இதனால் இவருக்கென ரசிகர்கள் கூட்டமும் உண்டு. இவருடைய பேச்சைக் கேட்டு பல நடிகைகள் கூட மேடைகளிலேயே இவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

Muthukumaran Bigg Boss madhampatti Rangaraj

பிக் பாஸ் முத்துக்குமரன் சர்ச்சை

இப்படி இருக்கும்போது இவர் மீது சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டா பிரபலம் வாஹதா வீடியோவில் சொன்ன புகார் தான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த வீடியோவில் வாஹதா மது அருந்தியப்படியே மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டபடி பேசும்போது, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் அதற்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருந்தார்.

லைவில் தற்கொலை முயற்சி

மேலும் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. என்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டேன். சில பிரேக்கப் நடந்திருக்கிறது இதெல்லாம் தெரிந்தும் முத்துக்குமரன் என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து, பீரியட்ஸ் நேரத்திலும் என்னுடன் பாலியல் உறவு வைத்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுக்கிறார். அந்த ஏமாற்றத்தில் தான் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்றும் அந்த வீடியோவில் சொல்லி இருந்தார்.

பிறகு அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி இருந்தனர். அப்போது அவர் மருத்துவமனையில் இருந்தபடியே கூட சில ஆடியோக்கள் மற்றும் முத்துக்குமரன் தனக்கு அனுப்பியதாகவும் சில ஸ்க்ரீன்ஷாட்டையும் சோசியல் மீடியாவில் அனுப்பி இருந்தார். இது சோசியல் மீடியாவை பற்றி எரிய வைத்தது. பெண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு முன்னேற்றத்திற்கு சப்போர்ட் ஆகவும் பேசி வந்த முத்துக்குமரனா இப்படி செய்தார்? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது.

முத்துக்குமரன் கொடுத்த புகார்

தனக்கு எதிராக அதிகமான நெகட்டிவ் உருவாகி வருவதை பார்த்ததும் முத்துக்குமரன் கமிஷனர் ஆபீஸில் வாஹதா மீது ஒரு புகார் கொடுத்திருந்தார். அவர் என்னுடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுகிறார், அதை நீக்க வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்துக்குமரன் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை நீங்கள் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என்று கடிதம் கொடுத்து இருக்கின்றனர்.

தீபாவளிக்கு முத்துக்குமரன் வீடியோ

சமீபத்தில் தீபாவளியை கொண்டாடிய முத்துக்குமரன் இட்லி சாப்பிட்டபடியே ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நமக்கு இப்போது போதாத நேரம் என்பதால் இந்த முறை நான் விரதம் இருக்கிறேன் அதனால் அசைவம் சாப்பிடவில்லை என்று சொல்லி பேசி இருந்தார். அவர் ஜாலியாக சொல்லி இருந்தாலும் வாஹதா தான் மீது கொடுத்த புகார் பற்றி தான் அவர் மறைமுகமாக பேசுவது போல தெரிகிறது. அதனாலயே காண்டான வாஹதா மீண்டும் முத்துக்குமரன் பற்றி வீடியோக்கள் வெளியிட தொடங்கிவிட்டார்.

மீண்டும் வாஹதா வீடியோ

இப்போது அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய உடலை நான் உனக்கு சும்மா கொடுக்கல. நீ தாலி கட்டுறேன் என்று சொன்ன நம்பிக்கையை நம்பி தான் உன்கூட நான் ஒன்றாக இருந்தேன். ஆனால் நீ என்ன பரிசு கொடுத்திருக்கிற பாத்தியா? எத்தனை முறை நீ என்கிட்ட தாலி கட்டுறேன்னு சொன்ன? ஆனா இப்போ கதையை அப்படியே மாத்தி பேசுற. இனி உன்னை சும்மா விடமாட்டேன். இதுவரைக்கும் உன் மீது புகார் கொடுக்கணும்னு நான் நினைக்கல, ஆனால் இனி நீ ஜெயிலுக்கு போக தயாரா இரு.

ஏற்கனவே நான் தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன். இனி சாகுற வரைக்கும் உன்னை விட மாட்டேன். ஜெயிலுக்கு போ இல்லன்னா என்கிட்ட வந்து சரண் அடைந்து விடு என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இது இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இது போலத்தான் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார், இப்ப என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று சொல்லி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பை ஏற்படுத்தினார்.

மாதம்பட்டி ரங்கராஜ் சம்பவம்

அந்த சமயத்தில் ரங்கராஜன் எனக்கும் அந்த குழந்தைக்கு சம்பந்தமே இல்லை. ஒருவேளை அந்த குழந்தை எனது என்று நிரூபிக்கப்பட்டால் நான் அந்த குழந்தையை காலம் முழுக்க கவனித்துக் கொள்வேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். பிறகு டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தை என்று நிரூபணம் ஆனது. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து குழந்தையை தான் ஏற்றுக் கொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டார். அதேபோல முத்துக்குமரன் விஷயத்தில் நடக்குமா? அல்லது முத்துக்குமரன் இந்த பிரச்சனையை நீதிமன்றம் மூலமாக சரி செய்யப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பும் பலருக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+