விஜய்யின் அம்பை ரோடு ஷோ தள்ளிப்போனது இதற்குதானா! ஜனவரியில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நவம்பர் இறுதியில் நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்ததாக திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே தவெக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து மற்ற 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். அவர்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By Election Vijay TVK Election Commission

அதேபோல் முதல்வர் விஜய்யும் பெருந்துறை, விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி முடித்துவிட்டார். இதனிடையே குழந்தைகள் தின விழாவை அம்பாசமுத்திரம் தொகுதியில் கொண்டாட முதல்வர் விஜய் முடிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் கொளத்தூர் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கொண்டாடினார்.

இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது. முதல்வர் விஜய் அம்பை செல்லாமல் தவிர்த்தது ஏன் என்று அக்கட்சியினரும் குழம்பினர். இந்த நிலையில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி ஜனவரி மாதத்தில் தான் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 2027ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடக்கும் போது தமிழ்நாட்டில் 5 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்குள் தொகுதி தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறார்கள். டிசம்பர் மாதத்திற்குள் தொகுதி தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

அதற்குள் திமுகவை ஊழல் கட்சி என்றும் நிறுவ தவெக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மறுபக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், தவெக நிர்வாகிகளின் சேட்டைகள் என்று அனைத்து பிரச்சனைகளையும் நீர்த்து போகாமல் வைக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+