சூரி வீட்டு கல்யாணத்தில் முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. பின்னணியில் இருக்கும் விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது எங்கே சென்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இயக்குநராக அவர் அறிமுகமான 'சிக்மா' படத்தைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது ஏதோ ஒரு சினிமா நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோ கிடையாது. சூரியின் அண்ணன் மகன் திருமணத்தில் ஜேசன் சஞ்சய் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். அப்போது சூரி அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்திருக்கிறார். இந்த வீடியோ வெளியானதும், விஜய் மகனுக்கும் சூரிக்கும் என்ன தொடர்பு, இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களா என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

Jason Sanjay Soori

உண்மையில் இவர்களுடைய அறிமுகம் இப்போது திடீரென உருவானது கிடையாது. ஜேசன் சஞ்சயின் முதல் படமான 'சிக்மா' உருவாக தொடங்கிய காலத்திலேயே சூரிக்கும் அவருக்கும் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறது. அதன்பிறகு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூரி பேசிய விஷயங்களும் இப்போது இந்தத் திருமண வீடியோவை பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றன.

கதை சொன்ன ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான 'சிக்மா' படத்தின் கதை சொல்லும் நிகழ்வின்போதுதான் சூரிக்கும் அவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு லைகா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் ஜேசன் சஞ்சய் சூரியை சந்தித்திருக்கிறார். அப்போ படத்தின் கதையை கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் தொடர்ந்து சொல்லியிருக்கிறார். இதுபற்றி சிக்மா படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூரி, ஜேசன் கதை சொன்ன அந்த இரண்டரை மணி நேரமும் தனக்கு விஜய் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு வந்தது என்று சொல்லி இருந்தார். ஜேசனின் தோற்றம் மட்டுமல்லாமல், அவருடைய பணிவும் தன்னை ஈர்த்ததாக பாராட்டியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் சொல்வது போலவே ஜெசன் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்று மேடையிலேயே சூரி கேட்டிருந்தார். அப்போது ஜேசன் ஓகே என்பது போலவே தம்ஸ்அப் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் கூட செம வைரல் ஆனது. அந்த நிகழ்ச்சியில் சூரி பேசிய விதத்தை பார்த்தாலே ஜேசன் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பது தெரிந்தது.

Jason Sanjay Soori

சூரி கொடுத்த மரியாதை

அந்த பழைய சினிமா சந்திப்புக்கு பிறகு இப்போது சூரியின் குடும்ப நிகழ்ச்சியிலும் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டிருப்பது கவனத்தைப் பெற்றிருக்கிறது. மதுரையில் நடைபெற்ற சூரியின் அண்ணன் மகன் திருமணத்துக்கு வந்த ஜேசன், மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். பிறகு மணமக்களுடன் போட்டோக்களும் எடுத்து இருந்தார். இந்தத் திருமணத்தில் தயாரிப்பாளர் தமிழ்குமரன், நடிகர் சஞ்சீவ், சசிகுமார், விமல் உள்ளிட்ட தல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Jason Sanjay Soori

திருமணத்தில் கலந்து கொண்ட காரணம்

ஜேசன் சஞ்சய் ஏன் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பதற்கான தனிப்பட்ட விளக்கம் வெளியாகவில்லை. ஆனால் சூரியுடன் ஏற்கெனவே அவருக்கு சினிமா ரீதியாக அறிமுகமும் நல்ல நட்புறவும் உருவாகியிருப்பது இந்த சந்திப்பை புரிந்துகொள்ள உதவுகிறது. இருவருக்கும் இடையிலான தொடர்பை பேசும்போது இன்னொரு சுவாரசியமான விஷயமும் இருக்கிறது. சிக்மா படத்தின் கதை சொல்லும் நிகழ்ச்சியில் சூரி கலந்துகொண்டது, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜேசனை பாராட்டியது என இருவருக்கும் ஏற்கெனவே ஒரு சினிமா தொடர்பு இருந்திருக்கிறது. இப்போது சூரியின் குடும்பத் திருமணத்திலும் ஜேசன் கலந்துகொண்டிருப்பதால் அந்த நட்புறவு மீண்டும் பேசப்படுகிறது.

பொதுவாக விஜய்யின் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே அது ரசிகர்களிடம் பேசப்படும். அதிலும் ஜேசன் சஞ்சய் சூரியின் குடும்பத் திருமணத்தில் கலந்துகொண்டு அவரிடம் மரியாதை பெற்றிருக்கும் இந்த வீடியோ இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது. சினிமாவில் ஏற்பட்ட அறிமுகம் குடும்ப நிகழ்ச்சி வரை தொடர்ந்திருப்பது தான் இந்தச் சந்திப்பில் ரசிகர்களை அதிகம் கவனிக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+