ஈரான் போரில் மாயமான கப்பல்கள்.. 6 மாதமாக மாலுமி மகனுக்காகக் காத்திருக்கும் திண்டுக்கல் தாய்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ​சர்வதேச அளவில் பதற்றம் நிறைந்த ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், இரண்டு சரக்குக் கப்பல்களுடன் மாயமான திண்டுக்கல் மாலுமி நவீன் குமாரை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கப்பல் வேலைக்குச் சென்ற தனது நவீன் குமாரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எந்தத் தகவலும் இல்லை. அவர் பணியாற்றியதாகக் கூறப்படும் இரண்டு சரக்குக் கப்பல்களும் ஈரான் கடல் பகுதியில் மாயமான நிலையில், அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

​ஈரான் போர் பதற்றம் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையே, பொலிவியா நாட்டின் கொடியுடன் எஃகு ஏற்றிச் சென்ற பிரிட்ஜ் 1 மற்றும் பிரிட்ஜ் 2 ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் ஈரானின் கிஷ் தீவு அருகே கடந்த மே 9 அன்று மாயமாகின.

Iran War

ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இந்த இரு கப்பல்களிலிருந்தும் எவ்வித அவசர உதவிக்கான டிஸ்ட்ரஸ் அழைப்புகளும் வரவில்லை.

இதில் தமிழ்நாடு திண்டுக்கல், குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் - பாண்டிச்செல்வி தம்பதியின் மகன் நவீன் குமார் உட்பட இரு இந்தியர்கள், மூன்று ஈராக்கியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 6 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். இதில், ​திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த நவீன் குமார், சென்னையில் ஜி.பி. ரேட்டிங் மரைன் படிப்பை முடித்துள்ளார். சுமார் 15 லட்சம் கடன் வாங்கி மகனைப் படிக்க வைத்த பெற்றோர், மும்பையைச் சேர்ந்த தனியார் முகமை மூலம் அவரை வேலைக்கு அனுப்பியுள்ளனர்.

துபாயில் ஆறு மாத ஒப்பந்தப் பணி எனக் கூறி அனுப்பப்பட்ட அவர், அங்கு பணியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே ஈரானுக்கு மாற்றப்பட்டு சரக்குக் கப்பலில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ​கப்பல் மாயமாகி 6 மாதங்களுக்கும் மேலாகியும் நவீன் குமார் குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் பெருந்துயரில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தும் எந்தவித தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என நவீன் குமாரின் தாய் பாண்டிச்செல்வி வேதனை தெரிவித்துள்ளார்.

​ஒருபுறம் மகனின் நிலை தெரியாத தவிப்பு, மறுபுறம் கல்விக்கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ வழியின்றி தவித்து வருவதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து தன் மகனை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தப் போரின் பாதிப்பு ராணுவத்தினரையும் மட்டுமல்லாமல், கடலில் பணியாற்றும் சாதாரண மாலுமிகளின் குடும்பங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அந்தப் பாதிப்புக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த நவீன் குமாரின் குடும்பமும் ஒரு சாட்சியாக மாறியுள்ளது.

இதற்கிடையே, மே 22ஆம் தேதியிட்ட மத்திய அரசு உத்தரவின்படி, மாலுமிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பத் தவறியது, அவர்களுக்கான ஊதியத்தை வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் லாஸ்கர் மரைன் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் இயக்குநர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு கடல்சார் தொழிலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+