மதுரையில் 21 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சிரமம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனிஷ்க் தங்க நகைக்கடையில் 21 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகரில் கொள்ளையன் தப்பி சென்ற சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக போலீசார் ஆய்வு செய்தபோதும், வாகனம் ஓட்டியவரின் முகம், வாகன பதிவு எண் என எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்பபடுகிறது. ஸ்கூட்டியில் வேகமாக சென்றாலும், முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றாலும், வாகன பதிவெண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை போலீசார் கொள்ளையன் தப்பிச் சென்றதாக சொல்லப்படும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.

Madurai Difficulty in locating the vehicle used to escape after robbery of 21 kg gold in Tanishq

சந்தேக வளையம்

அதில் கொள்ளையன் மாடக்குளம் சாலை வழியாக ஸ்கூட்டியில் தப்பிச்சென்றது உறுதியானது. இந்த சம்பவம் நடந்த கடையின் பின்புற சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஒரு தெருவை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரின் வீட்டில் நேற்று போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் வரை சோதனை நடந்தது.

யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறுகையில், "சந்தேக வளையத்தில் உள்ள நபர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். மேலும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வைத்து சாகசங்கள் செய்து அதனை வீடியோவாகவும் இன்ஸடாவில் பதிவிட்டு வந்தார். கொள்ளை நடந்த நகைக்கடைக்கு அவர் வேறு வேறு நாட்களில் 3 முறை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

சந்தேகத்தில் விசாரணை

ஒவ்வொரு முறை வரும்போதும் மாறு வேடங்களில் வந்து நகைக்கடையை நோட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அவரது புகைப்படங்களை, இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறோம். விசாரணை முடிவில் இவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது இல்லையா? என்பது தெரியவரும்" என்றனர். மேலும், இதுதொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான விஜில்குமாரையும் பிடித்து மதுரை தனிப்படை போலீசார் தீவிர விசாரிக்கிறார்கள்.

3 முறை நகைக்கடைக்கு வந்துள்ளார்

இந்த விசாரணைகள் குறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், "நகைக்கடையில் வேலை செய்யும் நபர்களுக்கும், இந்த கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் 2-வது நாளாக விசாரணையில் ஈடுபட்டோம். ஏற்கனவே கடைக்கு வந்து நோட்டமிட்ட கொள்ளையன்தான் நன்கு திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகத்தை உறுதி செய்துள்ளோம். மேலும் அவன் 3 முறை நகைக்கடைக்கு வந்து ஒத்திகை பார்த்துள்ளான்.

அதிகாலை 3.34க்கு தப்பி உள்ளார்

சந்தேகத்தைத் தவிர்க்க நான்கு சக்கர வாகனத்திற்கு பதிலாக பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டியை பயன்படுத்தி, கொள்ளையடித்த நகைகளை டிராலி பையில் வைத்து முன்பகுதியில் தொங்கவிட்டு தப்பி ஓடியுள்ளான். சந்து பொந்துகள் வழியாக மாடக்குளம் சாலை நோக்கி அதிகாலை 3.34 மணிக்கு அவன் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அந்த காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகங்களுக்கு விடை எப்போது

நகைக்கடையில் உள்ளவர்களின் துணை இல்லாமல் தனிஒருவர் இதில் ஈடுபட முடியுமா.. புதிய நகைக்கடை அண்மையில் தீபாவளிக்காக முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.. இப்படியான சூழலில் லிப்ட் வயரை பயன்படுத்தி சர்வ சாதாரணமாக ஒரு தனிநபர் கொள்ளையடித்துள்ளார் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரின் சந்தேக வளையத்தில் உள்ள நபர் கிடைத்தால் தான் அடுத்தகட்டமாக என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+