Tanishq Heist: கிலோ கணக்கில் கொள்ளை போன தங்கம்.. ‘மாஸ்க் மேன்’ இவர் தானா? கொள்ளையனை நெருங்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பட்டதாரி இளைஞரின் வீட்டின் சந்தேகத்தின் அடிப்படையில் 15 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பட்டதாரி இளைஞரின் தந்தையிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை மர்ம நபர் ஒருவர் தனி ஆளாகவே வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Robbery Police crime

சிசிடிவியில் பதிவான காட்சிகளில் கருப்பு நிற ஆடை, கையுறை மற்றும் முகம் முழுவதும் மறைக்கும் வகையிலான முகமூடி அணிந்த ஒரு நபர் பதற்றமின்றி நகைகளை தேர்ந்தெடுத்து அள்ளிச் சென்ற காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனிஷ்க் கொள்ளை

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொள்ளையனைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு பின்புற பகுதிக்கு பதிவெண் இல்லாத ஸ்கூட்டியில் முகமுடியுடன் ஹெல்மெட் அணிந்து வந்து ஈடுபட்டுள்ளான்.

முகமூடி கொள்ளையன்

கொள்ளைக்கு முன் கொள்ளையன் கீழே இறங்கி வேவு பார்த்தபோது அங்கிருந்த நாய்கள் துரத்தியதும் அங்கிருந்து கொள்ளையன் தப்பியது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக நகை கடையின் பின்புறம் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார். அந்த ஹார்ட் டிஸ்கை காவல் துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் தனிப்படை காவல்துறையினர், தற்போது விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தனிப்படை போலீசார்

அதன் ஒரு பகுதியாக, கொள்ளையனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் மதுரையில் இருந்து ஹைதராபாத் சென்ற தனிப்படை போலீசார், அங்குள்ள காவல்துறையினரின் உதவியுடன் கொள்ளையன் குறித்த தகவல்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிநபராக வந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையனை பிடிக்க மதுரை காவல்துறையினர் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பட்டதாரி இளைஞர்

மேலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசாரணை தீவிரமடைந்த நிலையில், தற்போது இளைஞர் ஒருவரின் மீது கவனம் திரும்பியுள்ளது. அதாவது இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா என்ற பட்டதாரி இளைஞரின் வீட்டில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் விசாரணை

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவர வீட்டில் பதுக்கி வைத்தாரா அல்லது அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் சென்று நிஷாந்த் கிருஷ்ணாவின் வீட்டில் விசாரணை மேற்கொண்டார்.

தந்தையிடமும் விசாரணை

மேலும், மாடக்குளம் காட்டுப்பகுதியில் நகைகளை விடிய விடிய தேடிய போலீசார், வயல்வெளி, தோப்பு, ரயில்வே தண்டவாளப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், பழங்காநத்தத்தில் இளைஞரின் தந்தையிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+