குழந்தை நீதி கதைகள்: பூட்ஸ் போட்ட கெட்டிக்கார மியாவ்..
சென்னை: Kids story in Tamil: ஹாய் செல்லம்ஸ்.. உங்கள் ல எத்தனை பேருக்கு பூனைக்குட்டி ரொம்ப புடிக்கும். புடிச்சவங்க கைய தூக்குங்க. ஒகே இன்னைக்கு நம்ம ஒரு விசித்திரமான பூனையோட கதையை படிக்கப்போறோம். ரெடியா!
கார்ரபாஸ் னு ஒரு ஊரு இருந்தது. அங்க ஒரு தொழிலாளி வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தாங்க. கடைசி மகன் கூட அவர் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். எங்க போனாலும் அவங்க ரெண்டு பெரும் சேர்ந்துதான் போவாங்க. நான்கு பேரும் ஒண்ணா இருந்து சாப்பிடும்போது கூட, அவன் பக்கத்து ல தான் அவங்க அப்பா இருப்பாங்க. அவன் பேரு மார்க்குயிஸ். அந்த தொழிலாளிக்கு ஒரு காற்றாலை அப்பறம் ஒரு கழுதை கடைசியா நம்ம கதையோட ஹீரோ ஒரு பூனைக்குட்டி இருந்துச்சு.

திடீரென ஒருநாள் மார்க்குயிஸ் அப்பாக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. உடனே மகன்களை அழைத்து மூத்த மகனுக்கு காற்றாலை , இரண்டாவது மகனுக்கு கழுதை மார்க்யூஸ் கு பூனையும் பங்கு பிரித்து கொடுத்தார். சில நாட்களில் மார்க்யூஸ் அப்பா இறந்துவிட்டார். அண்ணாமார்கள் இருவரும் மார்க்யூஸை கேலி செய்தனர். இங்க பாருடா இவன் அப்பா கூடவே ஒட்டிக்கிட்டு இருந்தான் கடைசில பூனைதான் மிச்சம் னு சிரிச்சாங்க. மார்க்யூஸ் கவலையில் மூழ்கிவிட்டான். அப்போது பூனை அவனிடம் எஜமான் அவர்களே அழாதீர்கள் என்றது. மார்க்யூஸ் , ' நீ பேசுற , எனக்கு புரியுதே ' என ஆச்சர்யமாக கேட்டான். மேலும் , ' என்னால் உனக்கு எதுவும் உதவ முடியாது , நீ எங்காவது சென்று நிம்மதியா இரு ' என்றான்.
பூனை சொன்னது, ' நீங்கள் தான் என்னுடைய எஜமான் , உங்களை விட்டு செல்ல மாட்டேன் , எனக்கு ஒரு பையும் ஒரு பூட்ஸ் ம் வாங்கித் தரீங்களா' என்றது. மார்க்யூஸ்,' ஆமா , உனக்கு எதுக்கு அது ? சரி நீ கேட்கிறாய் என்னிடம் இருக்கும் பணத்தில் வாங்கி தருகிறேன்' என்றான்.
இருவரும் அருகில் இருந்த டைலர் கடைக்கு சென்றனர். மார்க்யூஸ் ,' அண்ணா என்னோட பூனைக்கு ஏத்தமாதிரி நல்ல பூட்ஸ் அப்புறம் ஒரு பை குடுங்க' என்றான். அந்த கடைல ஒரு அழகான தொப்பி இருந்தது, மார்க்யூஸ் அதை பூனைக்கு வாங்கி கொடுத்தான். பூனை அதை போட்டு பார்த்து மிகவும் சந்தோச பட்டது. பூனை அதில் பார்ப்பதற்கு ராபின்ஹூட் ரேஞ்சில் இருந்தது.
பூனை அந்த பையை எடுத்துக்கொண்டு ஒரு வயல் பக்கம் சென்று சில கேரட் மற்றும் முள்ளங்கியை பறித்து பையில் போட்டுக்கொண்டது. மீண்டும் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றதும் முயல்கள் அதிகம் இருக்கும் பகுதியை பார்த்தது. கையில் இருந்த பையை அந்த முயல்கள் வரும் பக்கம் திறந்து வைத்தது. பூனை ஒரு மரத்தின் பின்னாடி ஒளிந்து கொண்டு கவனமாக பார்த்தது . கேரட்டை பார்த்த முயல்கள் அந்த பைக்குள் குதித்தது. சட்டென பாய்ந்த பூனை பையை கட்டியது. அதை எடுத்து கொண்டு மார்க்யூஸ் வீட்டுக்கு நடந்தது.
மார்க்யுசிடம் ,எஜமான் அவர்களே உங்களுக்காக பையில் என்ன கொண்டு வந்துள்ளேன் பார்த்தீங்களா என்றது பூனை. மார்க்யூஸ் அதை திறந்து பார்த்தான் , பூனையிடம் கெட்டிக்கார பூனையாக இருக்கிறாய் , என்னைப்போல் பேசுகிறாய் நீ விசித்ரமானவன் தான் என்றான் மார்க்யூஸ். மறுநாளும் பூனை காட்டுக்கு சென்றது. அதேபோல் முயல்களை பிடித்து கொண்டு எஜமானனிடம் கொடுத்தது. இருவரும் அதை சமைத்து உண்டு வந்தனர். வழக்கமாக நாட்கள் இப்படியே நகர்ந்தன. அடுத்த நாளுக்கும் எடுத்து வைக்கும் அளவுக்கு உணவுகள் இருந்தன.
பூனை மார்க்யூஸ் கு உணவு கொடுத்துவிட்டு ஒருநாள் அரண்மனைக்கு முயல்களை எடுத்து சென்றது. வாயிற்காவலனிடம் நான் அரசரை பார்க்க வேண்டும் என்றது. அது பேசுவதை பார்த்த காவலன் அது பூட்ஸ் போற்றுபத்தையும் கவனித்தான். சரி உள்ளே அனுப்புகிறேன் என்று கதவை திறந்து விட்டான். பூனையும் நடந்து சென்று எனது எஜமான் கர்ரப்ஸில் இருக்கும் மார்க்யூஸ் நான் அவரிடம் வேலை பார்க்கிறேன். இந்த முயல்களை உங்களுக்கு பரிசாக கொண்டு வந்தேன் என்றது. பூனை பேசுவதை பார்த்து ஆச்சர்யபட்ட இளவரசிக்கு அதன் பூட்ஸ் பார்த்து விசித்திரமாக இருந்தது. அரசரும் பரிசை வாங்கி கொண்டார். இளவரசி உனக்கு புஸ் என பேர் வைக்கிறேன் என்றார். பூனை இளவரசி தனக்கு வைத்த பேரை பற்றியும் அரசர்க்கு பரிசு கொடுப்பதை பற்றியும் மார்க்யுசிடம் கூறியது. மார்க்யூஸ் இளவரசியை பற்றி கற்பனையில் மிதந்தான்.
மறுநாளும் புஸ் முயல்களை கொண்டு அரசருக்கு பரிசாக அளித்தது. இது காட்டுத்தீபோல் ஊருக்குள் பரவியது. புஸ் பற்றி அனைவரும் பேச தொடங்கினர். புஸ் வழக்கமாக அரசருக்கு முயல்களை பரிசாக கொடுத்து வந்தது. மார்க்யூஸையும் நன்றாக கவனித்து கொண்டது.
ஒருநாள் அரசவையில் அரக்கன் ஒருவன் இருந்தான். அவனை தாண்டித்தான் அரசரை பார்க்க முடியும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். புஸ் தைரியமாக உள்ளே சென்றது. அரக்கனை பார்த்ததும் அவனை புகழ்ந்து பேசியது. 'ஆமா அரக்கன் அண்ணாச்சி நீங்க ரொம்ப பலசாலியாமே, உங்களால எந்த உருவத்துக்கு மாற முடியும் னு வெளிய சொல்லிக்கிட்டாங்க' னு சொல்லியது. அரக்கன் ஆமாம் என்று கர்ஜித்தான்.
புஸ் சொன்னது, 'அப்போ அண்ணாச்சி நீங்க என்னை விட பெரிய மிருகமா மாறி காட்டுங்க'. அரக்கனும் சிங்கமாக மாறி உறுமினான். அடுத்த நொடியே புஸ் சொன்னது , ' அண்ணாச்சி நீங்க ரொம்ப பலசாலி , அப்படியே ரொம்ப குட்டியா மாறி காட்டுங்க'. புகழ்ச்சியின் உச்சிக்கு போன அரக்கன் எலியாக மாறினான். சற்றும் யோசிக்காமல் புஸ் அதை தூக்கி சாப்பிட்டது. கோட்டையை விட்டு கெத்தாக நடந்து வெளியே வந்தது.
புஸ் மார்க்யுசிடம், எஜமான் நம்ம ஆற்றிற்கு குளிக்க செல்லலாமா என்றது. மார்க்யூஸ் இப்பவா , சரி நீ சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் வருகிறேன் என்றான். இருவரும் நடந்து ஆற்றுக்கு சென்றனர். மார்க்யூஸ் உடைகளை கழற்றி கரையில் வைத்து விட்டு குளிக்க சென்றான். புஸ் மார்க்யூஸ் உடைகளை புதற்கு பின்னல் ஒளித்து வைத்தது. அந்த நேரத்தில் அரசர் அந்த வழியாக வழக்கமாக வருவார் என்று புஸ் முன்பே அறிந்து வைத்திருந்தது. அரசரும் புஸ் நினைத்த மாதிரியே குடும்பத்துடன் குதிரை வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரது குதிரை வருவதை பார்த்த உடனே புஸ், உதவி உதவி என கத்தியது. சத்தம் கேட்டவுடன் அரசரும் புஸ்சின் குரல் என உறுதி செய்து வேண்டிய நிறுத்த சொன்னார்.
புஸ் அரசரை பார்த்து , ராஜா அவர்களே எனது எஜமானின் உடைகள் ஆற்றில் அடித்து சென்று விட்டது உதவுங்கள் என்றது. அரசரும் புஸ்ஸிற்காக ஒத்துக்கொண்டு காவலனிடம் அரச உடைகளை வண்டியில் இருந்து எடுத்து கொடுக்க சொன்னார். காவலாளியும் உடைகளை எடுத்து புஸ்ஸுடன் நடந்தார். மார்க்யுசும் புஸ்ஸின் திட்டத்தை புரிந்து கொண்டு உடைகளை உடுத்தி கொண்டார். அவர் பார்ப்பதற்கு ஒரு இளவரசனை போலவே இருந்தான். இளவரசியை முதல் முறை பார்த்ததும் அவளது அழகில் மெய் மறந்தான். பிறகு சுதாரித்து கொண்டு அரசரிடம் ராஜா அவர்களுக்கு நன்றி என்றான். அவரும் அவன் பார்ப்பதற்கு இளவரசன் போல் இருந்ததும் உன்னுடன் உணவருந்தலாம் என்று நினைக்கிறன் என்றார். புஸ்ஸும் உங்கள் விருப்பப்படியே மகாராஜா என்றது. மார்க்யுசும் சரி என்றான். அவரது குதிரை வண்டில் ஏறிக்கொண்டான்.
புஸ் குதிரை வண்டி முன்னாடி நடந்து சென்றான். போகும் வழியில் அழகான வயல்வெளிகள் இருந்தது. அது அந்த அரக்கனுடையது. அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் புஸ் சொன்னது , இந்த வயல்வெளி யாருடையது என அரசர் கேட்டால் கர்ரபாஸில் உள்ள மார்க்யுசுக்கு சொந்தமானது என்று சொல்லுங்கள்' என்றது. அவர்களும் சரி என்றனர். அரசர் குதிரை வண்டி அந்த பக்கம் வந்ததும் மிக அழகிய வயல்வெளி என எட்டிப்பார்த்தார். அங்கு இருந்தவர்களிடம் இது யாருக்கு சொந்தமானது என கேட்டார். அவர்களும் இது கர்ரபாஸில் உள்ள மார்க்யூஸ் என்பவருக்கு சொந்தமானது என்றனர். அரசரும் மார்க்யுசிடம் மிக அருமையாக பாதுகாக்கின்றாய் என்றார். அவனும் ஆமாம் என்பதுபோல் தலையாட்டி கொண்டான்.
புஸ் வேகமாக சென்று அரக்கனின் மாளிகையில் ஏற்பாடுகளை செய்தது. அனைவரும் அமர்ந்து தடபுடலாக விருந்தை உண்டனர். மாளிகையை பார்த்ததும் அரசர்க்கு இளவரசியை மார்க்யூஸ்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது. மார்க்யுசும் ஒத்து கொண்டான். திருமணம் கோலாகலமாக நடந்தது. புஸ் அவர்களுடன் சேர்ந்து ஏகபோகமாக வாழ்ந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications