குழந்தை நீதி கதைகள்: அஷு பண்ணது சரியா?.. தப்பா?.. நீங்க அங்க இருந்தா என்ன பண்ணுவீங்க..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ் யாருக்கெல்லாம் இந்த மழைக்காலம் பிடிக்கும். உங்களில் நிறைய பேருக்கு ஸ்கூல் லீவ் விட்ருப்பாங்க இல்லையா. உங்களை போலவே உங்க பக்கத்துக்கு ஸ்கூல்ல அஷு அப்படினு ஒரு பையன் படிக்கிறான். அவன் இந்த மழைக்காலத்துல என்ன பண்ணுனானு நீங்க படிக்க போறீங்க..
அஷு ஒரு சின்ன பையன். கொஞ்சம் குறும்புத்தனம் உண்டு ஆனாலும் அவன் கிட்ட இருக்குற ஒரு பழக்கம் அவன் நண்பர்கள், அம்மா, அப்பா யாருக்கும் பிடிக்காது. அது என்னனா, அவன் நண்பர்களை விளையாட கூப்பிடுவான் ஆனால் யாருக்கும் ஒரு பொருள் கொடுக்க மாட்டான். அதுபோல யாராச்சும் அவன் பொருளை எடுத்தா பயங்கரமா கத்துவான். கொஞ்சம் சுயநலம் பிடிச்சவன். மத்தபடி அவனும் நல்ல பையன் தான்.

இதனாலேயே அஷுக்கு பெருசா நண்பர்கள் இல்லை. அவனோட அம்மா, அப்பா சொல்லியும் அவனால அந்த குணத்தை மாத்திக்க முடில. அவனும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கல. அஷு ஸ்கூல் பக்கத்துல நடந்து போற தூரம்தான். தினசரி அவன் நடந்து போறதுதான் வழக்கமா வைத்திருந்தான். இப்போ மழைக்காலம் இல்லையா, நாளை பள்ளி விடுமுறை மழையின் காரணமாக அப்படி ஒரு அறிவிப்பு வந்தது. அவன் சந்தோஷத்தில் துள்ளி குதிச்சிட்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தான்.
அவன் தினமும் நடக்குற வழியில் மழையின் காரணமாக தண்ணி தேங்கி நின்னது, மாற்று வழியில் நடந்தான். அவன் நடக்கும்போது அங்க ஏதோ முனகல் சத்தம் கேட்டது. அஷு பயந்தான். ஆனா அந்த சத்தம் திரும்பவும் கேட்டது. அஷு அத பொருட்படுத்தாம திரும்பவும் நடந்தான். நமக்கு எதுக்கு வம்பு அப்படினு யோசிச்சுகிட்டே நடந்தான். அந்த சத்தம் அவனுக்கு இன்னும் பக்கத்துல கேட்டது.
அந்த சத்தம் அவனுக்கு அது என்னவா இருக்கும்னு பாக்க தோணியது. அஷு நடக்க நடக்க இன்னும் பக்கத்துல கேக்க ஆரம்பித்தது. அவன் நடந்த திசை பக்கத்துல ஒரு புதர் மாதிரி இருந்தது. அங்கிருந்துதான் அவனுக்கு சத்தம் கேட்டது. அவனுக்கு பயமாக இருந்தாலும் , அந்த முனகல் சத்தம் கேக்க பாவமாக இருந்தது.
அப்படி என்னதான் இருக்குதுனு தைரியத்தை வரவழைத்து புதரை விலக்கினான். உள்ளே ஒரு நாய்க்குட்டி இருந்தது. அது ரொம்ப குட்டி நாய்க்குட்டி , மழை அதிகமா பொழியறதுனால அதால குளிர் தாங்க முடியாமல் முனகி கொண்டே இருக்கு. அஷு, அட நீயா என்ன பயமுறுத்தின என்று சொல்லிக்கொண்டே அதை தொட்டு பார்த்தான். பிறகு அதை அங்கேயே விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தான். அந்த நாய்க்குட்டி புதரை விட்டு வெளியே வந்து அவனை பார்த்தது. மீண்டும் முனகியது. அஷு நடக்கும்போதே அதை திரும்பி பார்த்து கொண்டு நடந்தான். அஷு இதுவரை யாருக்கும் உதவியவன் இல்லை, ஆனால் இந்த நாய்க்குட்டி அவனை பார்க்கும்போது அத்தனை பாவமாக அவனுக்கு தெரிந்தது.
நாம இப்போ வீட்டுக்கு போய்விடுவோம். ஆனால் இந்த நாய்க்குட்டிக்கு யார் இருக்கா என அவன் சுயநலத்தை விட்டு விட்டு ஓடி வந்து அதை தூக்கிக்கொண்டான். அந்த குட்டி நாய் கண்களில் ஒரு நிம்மதியை பார்த்தான். அது அவனுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது. அந்த நாய் குட்டி புசு புசுவென இருந்ததால் சில்கி என பெயர் வைத்தான். இவன் கொண்டு வந்த நாயை பார்த்ததும் அவன் அம்மா அவனை திட்டினாள். அவன் அம்மா நமக்கு வீடு இருக்கு இந்த மழைக்காலத்தில் நாய்க்குட்டிக்கு வீடு இருக்கா, பாவம் அது னு சொன்னதும், அஷு இப்படி இரக்க பட மாட்டானே என எண்ணி அவனது அம்மாவும் சரி என ஒத்துக்கொண்டார்.
நாய் குட்டி வந்த பிறகு அஷுவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருந்தது. அவன் மற்றவர்களிடம் சகஜமாக பழக ஆரம்பித்தான். அவன் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி வந்தது.
ஆகையால் குட்டிஸ், இந்த மழைக்காலத்தில் உங்க தெருவோரங்களில் இருக்கும் நாய், பூனைகளுக்கு கொஞ்சம் அடைக்கலம் கொடுக்கலாமே.












Click it and Unblock the Notifications