குழந்தை நீதி கதைகள்: திருடர்கள் பிடிபட்டர்களா? காத்திருந்தது என்ன? - பாகம் 2
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க. பொங்கல் விடுமுறை முடிந்ததா?. யாரெல்லாம் நல்லா கரும்பு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தீங்க. சரி நாம போனவாரம் ஒரு கதை படித்தோம் இல்லையா அந்த ரெண்டு திருடர்கள், அதோட தொடர்ச்சி தான் இப்போ படிக்க போறோம். ரெடியா..
கஜானாவை காலி செய்த பீட்டரையும் ரெனால்டையும் பிடிக்க மந்திரி சொன்ன திட்டத்தை உடனடியாக அமல் படுத்தினார் அரசர். திருடர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்பதை புரிந்துகொண்ட மந்திரி அரசரிடம் அவர்கள் கண்டிப்பாக மேல் கூரையை துளையிட்டு உள்ளே குதித்திருக்கலாம் ஆகையால் அவர்கள் குதிக்கும் இடத்தை கணக்கிட்டு அதற்கு நேராக ஒரு பேரல் வைத்து விடுங்கள். மேலும் அதில் மாட்டிக்கொள்ளுமாறு பசையை நிரப்புங்கள் என்று கூறியிருந்தார்.

எல்லாம் சரியாக அமைத்து ரெடியாக காத்திருந்தார்கள் சிப்பாய்கள். சரியான நேரம் பார்த்து பீட்டர் உள்ளே குதிக்க அவன் பேரலில் மாட்டிக்கொண்டான். அடுத்து குதிக்க தயாராக இருந்த ரெனோல்ட் பயப்படாதே இந்த மாத்திரையை முழுங்கிகோ, மயக்கம் வரும் ஆனால் பார்ப்பவர்களுக்கு நீ இறந்தவன் போல தெரிவாய், நான் விரைவில் வந்து உன்னை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து தப்பித்தான். நண்பன் கூறியது போலவே மாத்திரையை சாப்பிட்டு மயங்கினான். சிப்பாய்கள் உள்ளே வந்து பார்த்ததும் அவன் இறந்ததாக உறுதி செய்தார்கள்.
அரசர், மந்திரி அனைவரும் யார் அந்த புத்திசாலிகள் என்று பார்க்க ஆவலாக வந்தார்கள். அங்கு ஒருவன் மட்டுமே பிடிபட்டதால், இவன் உடலை எடுக்க அவன் கண்டிப்பாக வருவான். ஆகையால் சிறையின் வெளியில் இவனை அப்படியே போடுங்கள். அவன் நண்பன் வந்ததும் அவனை பிடிக்கலாம் என்று உத்தரவிட்டார் அரசர்.
சிப்பாய்கள் அவனை அந்த பாரலோடு தூக்கி கொண்டு போய் வெட்ட வெயிலில் போட்டார்கள். பீட்டர் இறக்கவில்லை, மயக்கத்தில்தான் இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாததால் அவனது பிணத்தை காவல் காக்க வைத்துவிட்டார் அரசர் என்று சிப்பாய்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.
அப்போது அந்த வழியாக ஒரு வயதான ஒயின் வியாபாரி கைவண்டியை இழுக்க முடியாமல் இழுத்து கொண்டிருந்தார். வெயில் உச்சம் அவரை தள்ளாட வைத்தது. சிறையின் முன்பு ஏற்றமாக இருந்ததால் அவரால் இழுக்க முடியாமல் திணறினர். அப்போது சிப்பாய்களை பார்த்து அடேய் தம்பிகளா, இந்த வண்டியை அந்த பக்கம் மட்டும் இறக்கி தாருங்கள் என்று கேட்டார். ஐயோ, பெருசே இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் இந்த பெரிய கொலைகாரனின் நண்பன் வந்து இவனை தூக்கி சென்று விடுவான். அரசர் எங்களை பிறகு சிறையில் அடைப்பார். நீரே முடிந்தவரை இழுத்து செல்லும் அய்யா என்றார்கள்.
அந்த பெரியவரால் முடியாதலால், வண்டியில் ஒயின் இருக்கிறது, வண்டியை இறக்கி கொடுத்தால் ஆளுக்கு ஒரு பாட்டில் தருகிறேன் என்றார். வெட்ட வெயில் வேறு, சிப்பாய்கள் இவ்வளவு நேரம் வரவில்லை இப்பவே வர போகிறான் அதற்குள் வண்டியை இழுத்து கொடுத்தால் வெயிலுக்கு ஒயினாவது கிடைக்கும் என்று யோசிக்க, அதே போல் வண்டியை இழுத்து கொடுத்தார்கள்.
முதியவரும் அவர்களுக்கு ஒயின் கொடுத்தார். காவலுக்கு இருந்த சிப்பாய்கள் அனைவரும் அந்த ஒயினை குடிக்க அவர்கள், மயங்கி பொத்தென கீழே விழ ஆரம்பித்தார்கள். சமயம் வரை காத்திருந்த பெரியவர் கையில் இருந்த மாத்திரையை பரேலில் இருந்த பீட்டர் வாயில் போட்டார். சட்டென உயிர் பிழைத்தவன் போல முழித்தான் பீட்டர். அந்த பாஷையில் இருந்து வெளியே இழுத்தார் முதியவர். பீட்டர், அய்யா நீங்கள் யார் என்றே தெரியவில்லை எனக்கு உதவியதற்கு நன்றி என்றான். அரை மயக்கத்தில் இருந்த சிப்பாய்கள் முதியவர் பீட்டரை காப்பாற்றுவதை பார்த்தார்கள். ஆனால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

அங்கிருந்து பீட்டரை காப்பாற்றிய முதியவர், அவனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார். பீட்டர் அவருக்கு நன்றி கூறி கொண்டிருக்கும்போதே அந்த முதியவர் வேஷத்தை களைத்து ரெனால்டு ஆகா மாறினான். சந்தோஷத்தில் அவனை கட்டி பிடித்த பீட்டர் நீதான் புத்திசாலி திருடன் நான் ஒத்துக்கொள்கிறேன் என்றான். சில நாட்கள் இவர்கள், திருடாமல் வாழ்ந்தார்கள். அதே சமயம் சிப்பாய்கள் கோட்டை விட்டதை எண்ணி அரசர் வருந்தினார். அவர்களை பிடிக்க முடிவு செய்தார். அப்போது மந்திரி இவர்களை பிடித்தி சிறையில் அடைப்பதை விட நமது காவல் பணியில் ஈடு பட வைத்தால் நமக்குத்தான் நல்லது என்றார்.
அரசருக்கும் அது சரி என பட்டது. உடனே அறிவிப்பை திசையெங்கும் அனுப்பினார். பீட்டர் மற்றும் ரெனோல்ட் இதை கேள்வி பட்டு அரசவைக்கு வந்தார்கள். அரசரும் அவரின் புத்திசாலித்தனத்தை வியந்து பாராட்டி காவலர் பணியை கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications