இனி நீங்க ஆடுனா என்ன.. ஆடாட்டி என்ன? சூர்ய குமாரை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்.. டிரெண்டான மீம்ஸ்
சென்னை: நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டி 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ஆடிய விதத்தை பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு உள்ளனர்.
நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதில் சூர்யா குமார் யாதவ் ஆடிய விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர் சரியாக ஆடவில்லை. சரி பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று ரசிகர்களும் காத்து இருந்தனர்.

அதற்கு ஏற்றபடியே கடைசி போட்டியிலும் சூர்ய குமார் யாதாவிற்கு பிளான் போட்டபடி அமைந்தது . 40 ஓவருக்கு முன் அவர் இறங்கவில்லை. கடைசி கட்டத்தில்தான் இறங்கினார். நினைத்து இருந்தால் அதிரடியாக ஆடி இருக்கலாம். குறைந்தது ஒரு 30-40 ரன்களை அடித்து இருந்தால் ஆட்டத்தை சூர்ய குமார் யாதவ் மாற்றி இருப்பார்.
கடும் விமர்சனம்: ஆனால் அவருக்கு சாதகமான சூழ்நிலை இருந்தும் கூட நேற்று சூர்ய குமார் யாதவ் 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் நேற்று சூர்ய குமாருக்கு முன்பாக ஜடேஜா இறங்கினார். இதன் அர்த்தம் ரோஹித் சூர்ய குமாரை முன்கூட்டியே இறக்க நினைக்கவில்லை என்று அர்த்தம்.

அப்படி இருக்கும் பேட்ஸ்மேன் ஒருவரை ஏன் 11ல் சேர்க்க வேண்டும்? ஒரு 20 ஓவர்கள் ஒருநாள் போட்டியில் ஆட முடியாதவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை எடுத்து இருக்கலாமே என்று நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

சூர்ய குமார் யாதவ் மீம்ஸ்: நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டி 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ஆடிய விதத்தை பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு உள்ளனர். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய இந்திய டி 20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களுக்கு 208-3 ரன்களை எடுத்தது. ஸ்மித் 41 பந்தில் 52 ரன்கள், ஜோஸ் இங்கிலீஸ் 50 பந்தில் 110 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட்டிங் செய்தது.

ருதுராஜ் டக் ரன் அவுட் ஆனாலும் கூட.. இஷான் கிஷான் 39 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். அதேபோல் சூர்யா குமார் 42 பந்தில் 80 ரன்கள் எடுத்தார். இவர் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்தார்., கடைசியில் ரிங்கு சிங் 14 பந்தில் 22 ரன்கள் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்தார்.

இதில் சூர்ய குமார் யாதவ் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். உலகக் கோப்பை பைனலில் இப்படி ஆட முடியவில்லை உங்களால். இப்போது ஆடி என்ன பயன் என்று கடுமையாக கிண்டல் செய்து மீம் போட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications