கவர்ன்மென்ட் ரன் ஆனா தானே,அரசு பஸ் ஓடும்... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு காரணமான அரசை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
சென்னை: 13வது ஊதிய ஒப்பந்ததை நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெரும்பாலான பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை, இந்நிலையில் அரசின் பரிதாப நிலையை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ஏன் பஸ் ஓடல?
கர்ன்மென்ட் பஸ்லாம் ஏன் ஓடல, கவர்ன்மென்ட் ரன் ஆனா தானே அரசு பஸ் ஓடும், இங்கே அரசாங்கமே இல்லாம ஆட்சிக்குள்ளேயே ஐபிஎஸ் தானே நடக்குது என்று கலாய்க்கிறது ஒரு மீம்

எங்ககிட்ட ஏன் சொல்றீங்க..
அரசுப் பேருந்துகளை யாராவது உடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறையினரே வாகனங்களுங்கு தீ வைத்த சம்பவத்தை ஒப்பிட்டு எங்க கிட்ட ஏன் சொல்றீங்க போலீஸ்கிட்ட சொல்லுங்க என்று லந்து பண்ணுகிறது மற்றொரு மீம்

ரோட்டுல மக்கள்
வாக்குக்கு ரூ.200 பணம் வாங்கியவர்கள் தற்போது நடுரோட்டுல நிற்கிறார்கள் என்று கடப்பேத்துகிறது மற்றொரு மீம்

காசு செலவாகிடுச்சு
வைப்புத் தொகை கேட்டு போராடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு காசு செலவாகிடுச்சுணு அரசாங்கம் வடிவேலு ஸ்டைலில் சொல்வது போலவும், இந்த பிழைப்புக்கு ஆட்சியை கலைத்துவிட்டு போகலாம் என்பது போலவும் மற்றொரு மீம் சொல்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications