தமிழகத்தில் இன்று
சென்னை:
"மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை தனி நீதிமன்றம் புதன் கிழமைஉத்தரவிட்டுள்ளது.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) மார்ச்11ம் தேதி கைது செய்தனர். மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் ரசாயனம் கலந்து பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்என்றும், இதன் மூலம் மக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்றும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ராமர் பிள்ளை மீதான வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் கிழமை அன்று காவல் நீட்டிப்புக்காக ராமர் பிள்ளையை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது ராமர் பிள்ளை தமக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
தமக்குரிய சட்டப்பூர்வ காவல் காலமான 60 நாட்கள் முடிவடைந்து விட்டதாலும், வழக்கில் இன்னம் சிபிஐ குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யாததாலும், தன்னை ஜாமீனில் விடும்படி மனுவில் அவர் கோரியுள்ளார்.
மனுவை ஏற்ற நீதிபதி கண்ணன், அவரை நிபந்னை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் ராமர் பிள்ளை விடுதலைசெய்யப்பட்டார். 30 நாட்கள் தினம் பகல் 3 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், தனதுபாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும்நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமர்பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம்பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளைஅறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல்தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்றனர்.
அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார்.அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளைநியமித்தார்.
ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐமேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications