தமிழகத்தில் இன்று
கள்ளச்சாராயத்திற்கு விவசாயி பலி
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த விவசாயி இறந்தார்.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. அவ்வப்போது கணிசமான மாமூல் தொகைவெட்டுவதால் போலீசார் இதுபற்றி கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு விவசாயி இறந்துள்ளார்.
ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து வந்தவர். வயது 65. ராமசாமி அடிக்கடி கொளத்தூருக்குச் சென்று சாராயம்குடித்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், ராமசாமிக்கு விவசாயக் கடனாக ரூ. 511 கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் கொளத்தூர் சென்று சாராயம் குடித்தார்.குடித்த சிறிது நேரத்திலேயே அவர் சாராயக்கடை அருகேயுள்ள தனியார் பள்ளியின் கேட் அருகே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதுகுறித்து போலீசாருக்குத் தெரிவித்தால் பிரச்சனையாகிவிடும் என்று கருதி ராமசாமியின் உறவினர்கள் அவரது பிணத்தை எடுத்துச் சென்று சம்பிரதாயசடங்குகளைச் செய்து புதைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்நிலையில் ராமசாமி கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இறந்தார் என்று அரசு மேலதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக இதுகுறித்துவிசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸ் விசாரணையில், ராமசாமி கள்ளச்சாராயம் குடித்து இறந்தார் என்று போலீசாருக்குத் தெரியவந்தது.
ஆனால் போலீசார், இதுகுறித்து அரசு உயர்அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், ராமசாமி ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர். சம்பவத்தன்று அவர்அளவுக்கதிகமாக ஒயின்ஷாப்புக்குச் சென்று மது குடித்துள்ளார். அதனால்தான் இறந்தார். இது கள்ளச்சாராய சாவு அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications