தமிழகத்தில் இன்று
அரசியலில் நீடிப்பேன் என்கிறார் தமிழக சபாநாயகர்
மதுரை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து அரசியலில்நீடிப்பேன். அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று தமிழகசட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த வர்த்தகர் சங்க நிகழ்ச்சியில் பழனிவேல்ராஜன் பேசுகையில், எனதுஅரசியல் வாழ் விரைவிலேயே முடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது, கடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது ஒரு நாள்,முதல்வர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டார்.
அவரும் நானும், ஒரு அறையில் தனியாகப் பேசினோம். என்னிடம், சபாநாயகர்உள்பட பல பதவிகளை வகித்து விட்டீர்கள். உங்களது தேவையை நிறைவேற்றாமல்நான் இருந்ததில்லை. இப்போது என்ன பிரச்சினை உங்களுக்கு? ஏன் அரசியலில்இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்கிறீர்கள்? என்றார்.
குறை என்று எதுவும் என்னிடம் இல்லை. அப்படி இருந்தால் இன்று இப்பதவியில்இருந்திருக்க மாட்டேன் என்றேன். அதற்கு முதல்வர், பிறகு எதற்காக நீங்கள் ஓய்வுபெற வேண்டும். என் வயதைப் பாருங்கள். இன்னும் எதற்காக அரசியலில்இருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் பலத்தினால்தானே. நீங்கள்எல்லாம் போய்விட்டால், பின் நான் எப்படித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.
அவரது பேச்சில் உருகி விட்டேன். முதல்வர் கருணாநிதி, இந்த வயதிலும் தினமும் 20மணி நேரம் வரை உழைக்கிறார். இவரைப் போன்ற தேசியச் சிந்தனை படைத்த ஒருதலைவர் முன்பும் இருந்ததில்லை. இனியும் வரப் போவதில்லை என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications