தமிழகத்தில் இன்று
276 நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு ரூ. 1532 கோடி
சென்னை:
தமிழகத்திலுள்ள 276 தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் செய்துள்ள முதலீடுரூ. 1532 கோடி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனியார் நிதி நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் நிலை குறித்தும்,முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள வைப்புத் தொகை உரிய நேரத்தில், விரைந்துபெறுவதற்கான வழி வகைகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி தலைமையில்வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் நலன்களைப்பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடுமுதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம்-1997, என்ற சட்டத்தை இயற்றியது.
நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவும், தனி நீதிமன்றத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தியது.
இதுவரை 276 தனியார் நிதி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 9 லட்சத்து 400 முதலீட்டாளர்கள் ரூ. 1532 கோடி முதலீடு செய்துள்ளனர்.இவர்களுக்கு இதுவரை ரூ. 165 கோடி பணம் நிதி நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெறப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் தலைமயில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்முத்துச்சாமி, நிதித்துறை செயலாளர் ராஜாராமன், உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலாநாயர், டி.ஜி.பி. சர்மா, பொருளாதார குற்றவியல் பிரிவு டி.ஜி.பி. நெய்வால் ஆகியோர்கலந்து கொண்டனர்.
மூடப்பட்டுள்ள நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பதில் உள்ளசிக்கல்களை தீர்ப்பதற்கான வழிவகைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதல்வர்அப்போது அறிவுரை வழங்கினார்.
மேலும், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியவர்களின் சொத்துக்களைமுடக்குவதற்கு சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென்ற முதலீட்டாளர்கள் சங்கத்தின்கோரிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைந்து முடிவுசெய்யுமாறும் அதிகாரிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications