தமிழகத்தில் இன்று
வேகம் பிடிக்கிறது அடையாள அட்டை வழங்கும் பணி
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் 7 மாவட்டங்களில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் வேலையில் முழுமூச்சாய் இறங்கியுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
தேர்தல் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இன்னும் 10.7 லட்சம் மக்கள் வேட்டாளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யக்காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, வேலூர்,திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி முடிவடைந்து விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை சென்னையில் ராயபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி நடந்தது. இதற்காக சென்னைமாநகராட்சி பல இடங்களில் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்காளர்கள் 25 பள்ளிக்கூடங்களுக்கு வரவழைக்கப்பட்டுஅவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. ராயபுரம் தொகுதியில் 11, 000 வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டைகளைப்பெற்றனர்.
எழும்பூரில் ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதுகுறித்து தேர்தல் அதிகாரிடி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தமிழ்நாட்டில் 55,000 எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் இதையே விரும்புகின்றன. புதிய அரசு மே 21 ம் தேதி பதவிஏற்கும்.
தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 85 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம்தீர்மானித்துள்ளது. ஆனால் இதுவரை மாநிலம் முழுவதும் 52 சதவீதம் மக்களுக்குத்தான் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னைமாநகரில் 42 சதவீத மக்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன என்றார் கிருஷ்ணமூர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications