ரூ. 4 கோடி ஸ்வாஹா ..13 பேர் கைது .. 30 பேருக்கு வலைவீச்சு
சென்னை:
வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 4 கோடி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மேலும் 30 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
சென்னை ஜார்ஜ் டவுன் மற்றும் தி.நிகர் பகுதிகளில் உள்ள பெடரல் வங்கிக் கிளைகளில் போலி ஆவணம் மூலம் கோடிக்கணக்கான பணம் மோசடிசெய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவுப் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் காளிமுத்து உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணைக் கமிஷனர் முருகவேல் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மைக்கேல் முர்ரே, அந்தோனி ஜோசப் என்ற பெடரல் வங்கியின் அதிகாரிகள் இருவருக்கும் இம் மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து தீவிர விசாரணையில் மேற்கண்ட இரு அதிகாரிகளின் துணையுடன், போலியான ஆவணங்களை வங்கியில் செலுத்தி சுமார் ரூ. 4 கோடி அளவுக்குவங்கியில் பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இம் மோசடி தொடர்பாக மைக்கேல் முர்ரே, அந்தோனி ஜோசப், போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்த ராதாகிருஷ்ணன், சேகர், செர்வலிங்கம்,ஜெயபாலன், கடன் வாங்கி ஏமாற்றிய சதீஷ்குமார், ஆனந்தகுமார், நவுதம் உஷித், வேம்பு, வெங்கடேசன், அருள் பிரசாத் என 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவ் வழக்குத் தொடர்பாக மேலும் 30 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications