தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க கருணாநிதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனின் நிபந்தனைப்படி தமிழ் நாட்டில் பல சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்று தமிழக முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறினார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரையும் எந்த ஆபத்துமின்றி மீட்கும் முயற்சியில் இரு மாநிலஅரசும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

வீரப்பனின் நிபந்தனைகளுக்கான பதில்கள் அடங்கிய தஸ்தாவேஜூகளை இரு மாநில அரசும் தயாரித்து வருகிறது.

இந்த முறை ஆகஸ்ட் 16 அல்லது 17 ம் தேதி மீண்டும் காட்டுக்குச் செல்லும் நக்கீரன் கோபால் நல்ல பதிலைக் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராஜ்குமார் விடுவிப்பு குறித்தும், அதற்காக இருமாநில அரசுகளின் நடவடிக்கைகள்குறித்தும் பேசினார். அவர் கோபாலுடன் காட்டுக்குச் செல்ல மாட்டார்.

வீரப்பனின் கோரிக்கைப் படி தமிழ்நாட்டில் பல ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய விடுதலைப் படை, தமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகளைவிடுவிப்பதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

கர்நாடகத்தில் முதல்வர் கிருஷ்ணாவும், வீரப்பனின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளார்.

அவர் நிபந்தனைகள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறவில்லை. நிறைவேற்றக்கூடிய அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும்என்று கூறியுள்ளார்.

அடுத்த மாநிலத்தில் போய் எப்படி தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கேட்க முடியும்? அதே போல் காவிரி நீதிமன்றப் பிரச்சனையை சர்வதேசநீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறிவிட்டார்.

இந்த இரண்டு நிபந்தனைகளைத் தவிர்த்து பிற நிபந்தனைகள் நிறைவேற்றப்படும். ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.அதற்குப்பின் ஆகஸ்ட் 16 அல்லது 17 ம் தேதி கோபால் மீண்டும் காட்டுக்குச் செல்வார்.

இரண்டாவது முறை காட்டுக்குச் செல்லும் அரசுத் தூதர் நக்கீரன் கோபால் நல்ல பதிலைக் கொண்டு வருவார் என்று நம்புகிறோம். கோபால் இன்னும்எப்போது போவது என்று முடிவு செய்யவில்லை. பெரும்பாலும் அவர் 16ம் தேதி காட்டுக்குச் செல்லலாம் என்றார் கருணாநிதி.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் கருணாநிதி, நக்கீரன் கோபால், மூத்த அதிகாரிகள், ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+