நைஜீரியாவில் பயங்கரம்: மனிதனை உயிருடன் விழுங்கிய பாம்பு
Subscribe to Oneindia Tamil
லாகோஸ்:
நைஜீரியாவில் பாம்பு ஒன்று மனிதனை உயிருடன் விழுங்கியது.
தெற்கு நைஜீரியாவில் உள்ள எக்பெமா பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஓடா. இவர் ஆயில் நிறுவனம் ஒன்றில் டெக்னீஷியனாகப்பணிபுரிந்து வந்தார்.
கடந்த வாரம் இவர் தன் வீட்டருகிலுள்ள புதர் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மிகப் பெரிய ராட்சச பாம்பு ஒன்றுஇவரைக் குறிவைத்து வந்தது.
பின்னர் ஜார்ஜை உயிருடன் விழுங்கத் துவங்கியது. அவர் கதறித் துடித்தார். பக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மக்கள் அங்குவந்து பாம்பின் பிடியிலிருந்து இவரைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் பாம்பு இவரை முழுவதுமாக விழுங்கி விட்டது. அதற்குப் பின் பாம்பைப் பிடித்து அதன் வயிற்றைக் கிழித்து ஜார்ஜின் சடலத்தைடாக்டர்கள் எடுத்தனர்.












Click it and Unblock the Notifications