புதுவை மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தேசிய ஜவுளிக் கழகத்துக்குட்பட்ட சுதேசி காட்டன் மில் மற்றும் ஸ்ரீ பாரதி மில் தொழிலாளர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
சம்பள விகித்தை மாற்றவேண்டும். புதிய சம்பள விகிதம் அறிவிக்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கவேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.
மில்களின் 12 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 800 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறித்து ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் ஊர்வலத்தின் முடிவில் முதல்வர் பி. சண்முகத்தைச் சந்தித்து கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications