கூட்டணி ஆட்சி: அதிமுக-த.மா.கா. சண்டை தொடர்கிறது
சென்னை:
மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக நிற்கிறது என்று மூப்பனார் மீண்டும்வலியுறுத்தியுள்ளார்.
இதற்ககு அ.தி.மு.க. சார்பில் பதிலளித்துள்ள காளிமுத்து "கூட்டணி ஆட்சியால் குழப்பமே ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துள்ளார்.
குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த த.மா.கா. தலைவர் மூப்பனார், ""தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும் என்று நாங்கள்ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. மதச்சார்பற்ற சக்திகள் என்ற முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம். தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன என்று கூறி மீண்டும் கூட்டணி ஆட்சிபற்றிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதற்கு திருச்செந்தூரில் இருந்த அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக அதிமுகவில் ஜெயலலிதாவை தவிரமற்ற தலைவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. ஆனால், மூப்பனார் கருத்துக்கு பதிலடி கொடுப்பதற்கு மட்டும் காளிமுத்துவுக்கு ஸபெஷல் அனுமதிதரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
திருச்செந்தூரில் காளிமுத்து கூறுகையில்,
கூட்டணி ஆட்சி என்பது மூப்பனாரின் சொந்த ஆசை. அப்படி ஆசைப்படுவதில் தவறில்லை தான். ஆனால், நடைமுறை நிலைமையைப் பார்த்தால் தமிழகத்தில்கூட்டணி ஆட்சி கலாச்சாரமே கிடையாது.
எந்த தீர்ப்பு வழங்கினாலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை ஒரே தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்கி வருகின்றனர்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறவிடாமல் இருப்பதற்கே தவிர, ஆட்சி நாற்காலியை பகிர்ந்து கொள்வதற்காக அல்ல. அப்படிகூட்டணி போட்டு ஆட்சி அமைத்தால் குழப்பமே விளையும்.
தனித்து ஆட்சி அமைத்தால் தான் கொள்கைகளை நிறைவேற்ற இயலும். இதையெல்லாம் உணர்ந்து தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முடிவுக்கு தமாகாஉள்ளிட்ட கட்சிகள் கட்டுப்படும் என்று கூறினார் காளிமுத்து.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications