உடுமலை குண்டுவெடிப்பு வழக்கு .. அரசு வக்கீல் வாபஸ்
கோவை:
உடுமலைப் பேட்டையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆஜரான அரசு தரப்பு வக்கீல் இந்த வழக்கில் வாதாடுவதிலிருந்து விலகினார்.
இதற்கான கடிதத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைக்கிள் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்குபேர் இறந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் திங்கள்கிழமை குற்றம்சுமத்தப்பட்ட அப்துல் கரீம், சுல்தான், நாசர் உட்பட 10 பேர் ஆஜர் செய்யப்பட்டனர்.
தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜி. சவுந்தர்ராஜன் ஆஜராகி வந்தார். ஆனால், திங்கள்கிழமை அவர் நீதிபதிதணிகாசலத்திடம், ஒரு கடிதத்தை அளித்தார்.
அந்தக் கடிதத்தில், இந்த வழக்கில், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வழக்கில் தொடர்ந்து வாதாட இயலாத நிலையில் இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே, மாநில உள்துறைச் செயலர் சாந்தாஷீலா நாயர், மற்றும் சி.பி.சி.ஐ.டி பிரிவின் ஐ.ஜி பரம்வீர் சிங்கிற்கும் தகவல்தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தணிகாசலம், செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் இனி புதிதாக அரசு தரப்புவக்கீல் நியமிக்கப்படவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications