ராஜ்குமார் கடத்தலின் மூலகர்த்தா கருணாநிதி .. ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன், கருணாநிதி மற்றும் அவரது எடுபிடிகளின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.கபொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடிக் குற்றத்தைச் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் வெள்ளிக் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

சந்தன மரக் கடத்தல்காரன் வீரப்பனைப் பிடிப்பதில் முதல்வர் கருணாநிதி தனக்குக் கையாலாகவில்லை என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டிக்கொள்வதன் மூலம், தானே புதைச் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.

வீரப்பனைப் பிடிப்பதில் என்னுடைய ஆட்சியில் காவல்துறையின் அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கைகளை மூடி மறைத்து, வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் பட்டியலை உடன்பிறப்புகளுக்கு கடிதமாக எழுதி தனக்குத் தானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் கருணாநிதி.

1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதே வீரப்பனை "மாயாவி வீரப்பன் என்று சட்டமன்றத்திலேயே கருணாநிதியின் அமைச்சரவை சகாபுகழாரம் சூட்டினார்.

அப்படிப்பட்ட வீரப்பனைப் பிடிப்பதற்கு என்னுடைய ஆட்சியில் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் தனி அதிரடிப்படை அமைக்கப்பட்டு அவனைத் தேடிவேட்டையாடியதன் மூலம் 150 பேருடன் பெரும்படையாக இருந்த வீரப்பன் 5 பேர் கொண்ட சிறிய கும்பலாகக் குறைக்கப்பட்டான். ஆயுதங்களை இழந்துஇரண்டே துப்பாக்கிகளுடன் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.

கொடிய கொலைகாரன் வீரப்பன் இதுவரை காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட 130 பேரை அநியாயமாகக்கொன்றிருக்கிறான். படுகொலை செய்யப்பட்டவர்களில் 119 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 119 தமிழர்களை படுகொலை செய்த வீரப்பனை"தமிழர் தலைவன் என்று ஒரு முதல்வர் புகழ்வது அந்த பதவிக்கே கேவலமானது.

என்னுடைய ஆட்சியில் 1995 மற்றும் 96ம் ஆண்டுகளில் தீவிரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், காட்டில் ஒரு இடத்தில் நிலை கொள்ள முடியாமல்ஓடிக் கொண்டே இருந்த கொடியவன் வீரப்பனின் தனிப்பேட்டி 1996ம் ஆண்டு மே மாதம் தேர்தல் வந்தபோது கருணாநிதியின் குடும்ப டி.வி.யில்வெளிவந்ததே. இதற்கு யார் யார் கூட்டு?

இப்போது வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் காட்டும் கருணாநிதி தன்னுடைய குடும்ப டி.வி.யில் அதே வீரப்பன் தனக்குத் தேர்தல்பிரச்சாரம் செய்த போது மகிழ்ந்தாரே. அப்போது படுகொலையுண்டவர்களின் பட்டியல் கண்ணுக்குத் தெரியவில்லையா?

1996ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு வீரப்பனைப் பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட அதிரடிப் படையின் தலைவர்களை அடிக்கடி மாற்றி அதிரடிப்படையைஇயங்க விடாமல் முடக்கி வைத்த கருணாநிதியின் செயலை என்னவென்று சொல்வது? இந்த நான்கரை ஆண்டு காலத்தில் அதிரடிப்படையினால் எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன?

வீரப்பன் நடத்திய கொலை கொள்ளை ஆள் கடத்தல் ஆகிய அனைத்தும் தி.மு.கவினரின் துணையோடு தான் நடக்கின்றன என்பதை கருணாநிதியால் மறுக்கமுடியுமா? வீரப்பனும் கருணாநிதியும் அவரது எடுபிடிகளும் நடத்தும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பதைநாட்டு மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

ராஜ்குமார் கடத்தப்பட்டு 47 நாட்கள் ஆகியும் அவரை மீட்பதற்கு உரிய வகையில் பலர் முன் வந்து வீரப்பனுடன் பேசத் தயார் என்று தெரிவித்திருந்தும்அவர்களை புறக்கணிப்பதும், அப்படிப்பட்டவர்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் "யார் அந்த வேணுகோபால்? என்று கருணாநிதி சீறிஎரிந்து விழுவதுமே கூட்டுச் சதியின் மூல காரணகர்த்தாவே கருணாநிதி தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடக்கி ஒடுக்கும் கடமையை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டகுற்றவாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாவகரமான கூட்டணி இருப்பது கவலையைத் தருகிறது.

குற்றச் செயல்களும் வன்மமுறைகளும் பெருகி வருகின்றன. குற்றவாளிகளை மாவீரர்களாகவும், தியாகிகளாகவும் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தன்னலமற்ற சமூகத் தொண்டர்களாகவும், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லக் கிடைத்துள்ள புதிய தலைவர்களாகவும் வர்ணிக்கும்போக்குபத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் மக்கள் தொடர்பு சாதனங்களிலும் காணப்படுகிறது.

இது வருத்தத்தைத் தருகிறது என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் 53வது சுதந்திரதினத்தில் உரையாற்றுகையில் மனம் வெதும்பிகுறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 30ம் தேதியன்று இரவு ராஜ்குமார் கடத்தப்பட்டதில் இருந்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பதறிப் போய் இருக்கிறார்.

ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியோ எவ்வித பதற்றம் இன்றி எதுவுமே நடக்காதது போல தேரும் திருவிழாவுமாக தினமும் விழாக்களில்பங்கு பெற்று தான் வருகிறார். கடத்தல் நாடகத்தின் காரண கர்த்தா கருணாநிதி தான் என்பதற்கு இது ஒன்றே போதுமே.

கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியின்றி அன்றாடம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றவர்கள் மீது குற்றம்சுமத்த நினைக்கிற முதல்வர் கருணாநிதி. இந்தக் கடத்தல் நாடகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இதனால் ஏற்படுகிற அனைத்துவிளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+