காஷ்மீர் பிரச்சினையில் உதவத் தயார் .. கிளின்டன்
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் உதவத் தயார் என்றுஅமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தெரிவித்தார்.
இது தொடர்பாக வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் உள்ளூர் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண எந்த விதத்திலும் உதவஅமெரிக்கா தயாராக உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடன் நல்ல, நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

தற்போது இந்தியப் பிரதமர் வாஜ்பாய், அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் இதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதிகிறேன்.
அமெரிக்கா வந்துள்ள வாஜ்பாயிடமிருந்து நான் எதிர்பார்ப்பதெல்லாம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெற நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும் என்பதுதான். வாஜ்பாயியின் இந்தப் பயணத்தின்போது இது தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
இந்தியாவைப் போலவே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும். அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும்அமெரிக்கா எதிர்க்கிறது. எனது நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கையே பயங்கரவாத எதிர்ப்புத்தான் என்றார் பில் கிளின்டன்.
காஷ்மீர் பிரச்சினை குறித்த பில் கிளின்டன் தெரிவித்த கருத்து குறித்து பதில் கருத்து தெரிவிக்க பிரதமர் வாஜ்பாயியின் முதன்மைச் செயலர் பிரிஜேஷ் மிஷ்ராமறுத்துவிட்டார்.
காஷ்மீர் பிரச்சினை பற்றி விவாதிக்க வாஜ்பாய் அமெரிக்கா வரவில்லை. இருப்பினும் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் என்ற தலைப்பில் நடைபெறும்அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் அது பற்றி விவாதிக்கப்படும்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் வாஜ்பாய் நிகழ்த்திய உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் மிஷ்ரா.
ராய்டர்ஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications