ஹசீனா "கமெண்ட் ... முஷாரப் "உர்ர்
கராச்சி:
பாகிஸ்தான் குறித்து வங்கதேசப் பிரதமர் ஹசீனா வஜித் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கராச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கும் சக்திகளை அழிக்கவேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிராகமேலும் சில கருத்துக்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் ஹசீனா பேசினார்.
இது கடுமையான கண்டனத்துக்குரியது. ஹசீனா கூறியதுபோல் பாகிஸ்தானில் ஜனநாயகம் ஒன்றும் அவ்வளவு மோசமாக சீரழிந்துவிடவில்லை.பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை.
ஹசீனா கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்தான் ஹசீனாவுடன் நடைபெற இருந்த சந்திப்பை நான் ரத்து செய்துவிட்டேன்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்து அங்கு புதிதாக ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியபோது தெரிவித்த கருத்துக்கு மாற்றாக ஹசீனாஇப்போது புதிய கருத்தைக் கூறியுள்ளார். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஏராளமான வங்கதேச மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் மன்னிப்புக்கோரவேண்டும் என்று ஹசீனா கூறியுள்ளார்.
இதுவும் நடக்காது. கடந்த காலத்திலும் 1971-ம் ஆண்டிலும் நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு எதிர்காலத்தை நோக்கி நடைபோடவே நாங்கள்முயற்சிக்கிறோம் என்றார் முஷாரப்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications