மேற்கு வங்கத்தில் வெள்ளத்தில் மிதக்கும் பிணங்கள்

Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

மேற்கு வங்காளம் வெள்ளத்தில் கோரத்தில் சிக்கிக் கிடக்கிறது. மெதுவாக வெள்ளம் குறைந்சு வருகிறது என்றாலும்,சிதறிக் கிடக்கும் பிணங்கள் மனதைக் கலங்கச் செய்கின்றன.

இதுவரை சுமார் 750 முதல் 1,000 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்காலம் எனத் தெரிகிறது. மொத்தம் 9மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 17 மில்லியன். இவர்களில் 5 மில்லியன்மக்கள் மட்டும் மீட்கப்பட்டு 5,000 நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

முர்ஷிதாபாத்தில் மட்டும் 500 பேர் வெள்ளத்தால் உயிர் இழந்திருக்கின்றனர். பிர்பம் மாவட்டத்தில் 500 பேர்இறந்து போயுள்ளனர். இதில் 230 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளனர்.

பல இடங்களில் வெள்ளத்தால் சூழப்பட்ட மக்களைக் கூட நிவாரணக் குழுக்களால் நெருங்க முடியவில்லை.

பல இடங்களில் மனித உடல்களோடு, மாடுகளின் உடல்களும் அழுகிக் கிடக்கின்றன. பாகீரதி ஆற்றில் ஒரு தாயின்உடலும் அதைப் பிடித்துக் கொண்டு மிதக்கும் குழந்தையின் உடலும் கண்ணில் நீர் வரவழைப்பதாக இருந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் மூழ்காமல் உயரத்தில் இருக்கும் ரயில் பாதைகளில் அமர்ந்துள்ளனர்.உணவுக்காகவும் ஒரு கூரைக்காகவும் ஏங்கி நிற்கின்றனர் இந்த மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+