இதோ, ஸ்பானிஷ் மொழியில் பகவத் கீதை
வெனிசுவேலா:
வெனிசுவேலாவில் பிறந்த ரோமன் கத்தோலிக்கரான ஒரு பெண்மணி பகவத் கீதையை ஸ்பேனிஷ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
கியூபாவில் இந்தியத் தூதராக இருந்தவர் வி.பி. சிங். இவர் முன்பு வெனிசுவேலாவில் இந்தியத் துதராகஇருந்தபோது அந்த நாட்டைச் சேர்ந்த மோரா அபிலஹுட் என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தப் பெண் ஒரு ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற சிங் இப்போது தனது மனைவியுடன் உத்தரப் பிரதேசத்தில் ரிஷிகேஷில் தந்கியிருக்கிறார்.
இந்து மதத்தில் அதீத ஆர்வம் கொண்ட மோரா சமஸ்கிருதம் படித்தார். கீதை பயின்றார். அப்போது பகவத்கீதையை கடவுளின் பாடல் என்ற பெயரில் ஸ்பேனிஷ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள வெனிசுவேலாவின் தூதர் இந்த நூலை தனது நாட்டில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனது நாட்டின் தலைநகர் கேரகஸில் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்பானிய மொழியில் கீதை வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகாக கங்கை நீரும் வெனிசுவேலோவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்தில் மும்பை வந்த வெனிசுவேலா நாட்டு அதிபருக்கும் இந்த மொழிபெயர்ப்பு கீதை வழங்கபட்டது.
இந்த மொழி பெயர்ப்புக்கு தனக்கு 3 ஆண்டுகள் பிடித்ததாகக் கூறுகிறார் மோரா. இந்து மதத்துக்குமாறிவிட்டீர்களா எனக் கேட்டால், எனக்கு மதமே கிடையாது, நான் எந்த மதத்தையும் சேர்ந்தவள் அல்ல என்கிறார்இறை கல்வியும், தத்துவமும் படித்த இந்தப் பெண்.












Click it and Unblock the Notifications