சென்னையில் ஒரே நாளில் 4 பெண்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரே நாளில் நான்கு இளம் பெண்கள் காணாமல் போனதாக போலீஸில்புகார் செய்யப்பட்டது.
சென்னை பரங்கி மலையைச் சேர்ந்தவர் மாலதி. இவருக்கு வயது 25. திங்கள்கிழமைஇவர், சில பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றார். ஆனால் அதன் பிறகுஅவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாலதி குடும்பத்தினர் போலீஸில் புகார்தெரிவித்துள்ளனர்.
இதேபோல, ஐயப்பன் தாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்த லதா என்பவரும்திங்கள்கிழமை முதல் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவர்நேற்று முன்தினம் வீட்டை விட்டுச் சென்றார். இதுவரை திரும்பவில்லை.
மாங்காட்டைச் சேர்ந்த வைரதீப் என்ற 20 வயதுப் பெண்ணும் காணாமல் போய்விட்டதாக மாங்காடு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நான்கு பெண்கள் காணாமல் போய் விட்டதாக போலீசுக்கு புகார்வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications