ஜனநாயகம் தழைக்க நாள் குறிக்கிறார் முஷாரப்!
லாகூர்:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு விட்டது என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
முஷாரப், பாகிஸ்தானில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமுஷாரப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பில் நீண்ட காலம் இருக்காது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதிக்குள் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும்.
சில சக்திகள் பாகிஸ்தான் வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காணப் பொறுக்காமல் சதி வேலைகளில் ஈடுபடுகின்றன. ராணுவ அரசு ஊழலை ஒழிக்கஎடுத்த நடவடிக்கைகள் நல்ல பலன்ை கொடுத்துள்ளன.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பல்லாண்டுகளாகப் பதட்டம் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையலிான மோதலில், ராணுவவீரர்கள், தீவிரவாதிகள், அப்பாவிப் பொதுமக்கள் என்று பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட இருநாடுகளும் முயற்சித்தால் மட்டுமே சுமூகமான நிரந்தரத் தீர்வு காண முடியும். சமீபத்தில் ஹிஸ்புல்மூஜாஹிதின் தீவிரவாத அமைப்பு போர்நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என்று ஹிஸ்புல் நிபந்தனை விதித்தது. இதை இந்தியா நிராகரித்ததையடுத்து போர்நிறுத்தம்வாபஸ் பெறப்பட்டது. இதனால் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை இந்திய நழுவ விட்டு விட்டது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் என்றால் உடனே அனைத்து நாடுகளும் அதற்கு மூலகாரணமாக பாகிஸ்தானையே நினைக்கின்றன. அதை விட்டுவிட்டுஉலக நாடுகள் தலிபான் அமைப்பிடம் நேரடித் தொடர்பு கொள்ள முயல வேண்டும்.
சில பத்திரிக்கைகளில், பாகிஸ்தானில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிற நாடுகளுக்கு இடம் பெயருகிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றார்முஷாரப்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications