3-வது அணிக்குத் தலைமை தாங்கத் தயார் .. காங்.
சென்னை:
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்கதயார் என கூறியுள்ளது.
இதுவரை அ.தி.மு.க.வை சார்ந்திருந்த காங்கிரஸ் இப்போது மூன்றாவது அணிஅமைந்தால் அதற்குத் தலைமை ஏற்கும் என கூறியுள்ளது. ஜெயலலிதா மீது டான்சிவழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில்முக்கியக் கட்சியான காங்கிரஸ் இப்படிக் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியான சங்கர நாராயணன் இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணிக்கு தலைமைஏற்பதில் தவறு என்ன?.
தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமையும்போது, ஆட்சியில் பங்கு பெற விரும்புகிறது.ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டாலும் கூட ஊழல் என்பதுஅப்படியேதான் உள்ளது. எனவே தேர்தலில் ஊழல் ஒரு பிரச்னையாக பேசப்படும்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது வருத்தம் தருகிறது. இது இறுதி தீர்ப்புஅல்ல என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications