2 நாளில் முடிவு தெரியும் .. "நக்கீரன் காமராஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்னும் 2 நாட்களில் கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக முடிவுதெரியலாம் என்று நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கூறியுள்ளார்.
ராஜ்குமார் விடுவிப்பு தொடர்பாக பழ. நெடுமாறன் தலைமையிலான புதிய தூதுக்குழுவுடன் நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் சனிக்கிழமை கூறுகையில், கோபால்,நெடுமாறன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு காட்டுக்குள்நுழைந்தனர். சனிக்கிழமை பிற்பகல் வாக்கில் அவர்கள் வீரப்பன் இருப்பிடத்தைஅடைந்திருப்பர்.
சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிமையும் அவர்கள் பேச்சு நடத்துவார்கள்.திங்கள்கிழமைக்குள் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் என்றுஎதிர்பார்க்கிறோம்.
இந்த முறை நிச்சயம் ராஜ்குமாரை மீட்டு விட முடியும் என்று கோபால் நம்பிக்கைதெரிவித்துள்ளார் என்றார் காமராஜ்.












Click it and Unblock the Notifications